Tag Archive: விஸ்வாமித்ரர்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56

பகுதி ஐந்து : எரிசொல் – 2 அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில் காத்திருந்த காவல்வீரர்களால் எதிர்கொள்ளப்பட்டார். வண்டி நிறைய பொருட்களுடன், மடி நிறைய பொன்னுடன், திருமகள் வடிவென வரும் வணிகர்களை எதிர்பார்த்திருந்த காவலர்கள் அவள் தமக்கையின் வடிவென அழுக்கு உடையும் சடைமுடித் தலையுமாக வந்த விஸ்வாமித்ரரை கண்டதும் சீற்றம் கொண்டனர். முதலில் எவரோ தங்களை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131250/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55

பகுதி ஐந்து : எரிசொல் – 1 தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி நலுங்கி அசைய மடியில் வேய்குழலுடன் கைகளை மார்பில் கட்டி இளம் புன்னகையுடன் விழி மூடி அமர்ந்திருந்த இளைய யாதவரின் முன் அமர்ந்து முதிய சூதன் தன் இரு விரலால் குறுமுழவை மீட்டி பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியத்தில் அகவை ஒலியில் பாடிக்கொண்டிருந்தான். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131216/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–33

பகுதி நான்கு : அலைமீள்கை – 16 நீண்டநேரம் கிருதவர்மன் அமைதியாக இருந்தார். பின்பு “நான் அவரை சந்திக்கும் களங்கள் முடியப்போவதே இல்லை என்றே எப்போதும் உணர்கிறேன். என் இருப்பு என்பதே அக்களங்களில் எதிர்நிலையாக உருவாவதுதான். அந்தக் களங்கள் இல்லையேல் நான் இல்லை” என்றார். “மூதாதையே, உங்கள் களங்கள் பிறவிபிறவியென நீள்வனவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் இனி அவரை இங்குள்ள களத்தில் சந்திக்கப்போவதில்லை” என்று நான் சொன்னேன். “அவர் முற்றாக விலகிவிட்டார். சாத்யகி சென்று அவரை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130656/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–31

பகுதி நான்கு : அலைமீள்கை – 14 நான் சிந்துவின் வழியாக வடபுலம் சென்று இமையமலையின் அடிவாரத்தில் பருஷ்னி நிகர்நிலத்தை தொடும் இடத்தில் அமைந்திருந்த காட்டில் கிருதவர்மன் தங்கியிருந்த குருநிலைக்கு ஏழு நாட்களுக்குப் பின் சென்றுசேர்ந்தேன். அங்கே இருந்த முனிவர்கள் எவரென்று கிளம்பும்போது நான் அறிந்திருக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் குழப்பமாகவே இருந்தன. அது விஸ்வாமித்ரரின் குருநிலை என்று அங்கு சென்ற பின்னரே அறிந்தேன். விஸ்வாமித்ரர் குறித்து துவாரகையில் அச்சமும் குழப்பங்களும் இருந்தன. அவர் ஷத்ரியர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130653/

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-29

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.” ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/108523/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25

[ 3 ] கோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில் பீலிவிசிறிகள் போல அலையலையாக வந்து தழுவிய குளிர்ந்த முற்றத்தில் இறங்கி உடல் குறுக்கியபடி நடந்தனர். தன் குடில்முன் வந்ததும் தருமன் நின்றார். இளையவர்கள் அவரை வணங்கி விடைபெற்றனர். குடிலுக்குள் சென்று தனிமையை உணர்ந்ததுமே திரௌபதியின் உறுதிதான் அவர் நெஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/89707/

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34

[ 5 ] பிரம்மனுக்கு நிகரென திரிசங்குவுக்கென ஓர் உலகை அமைத்துக்கொடுத்தவர் என்று விஸ்வாமித்ரரை போற்றின காவியங்கள். அவரை மண்ணில் நிகரற்ற அரசமுனிவர் என்றனர். தன் உள்ளத்தை அவியாக்கி உள்ளனலை எரித்து மேலும் மேலும் மூண்டெழுந்தார். சுட்டுவிரல் நீட்டித் தொட்டு பச்சை மரத்தை எரிக்கும் ஆற்றல்கொண்டார். சொல்லால் கொல்லவும் உயிர்ப்பிக்கவும் திறல்கூடியவரானார். தெய்வங்கள் அஞ்சும் சினத்திற்குரியவர் என்று அவரை படிவர் பாடினர். அமர்தலின்மை என்பதே அரசனுக்குரிய இயல்பென்பதனால் அவர் மேலும் மேலும் என நாடிச்செல்பவராக இருந்தார். விண்ணாளும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/87359/