Tag Archive: லூப் [சிறுகதை]

வனவாசம், லூப்- கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து. அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131019/

லூப்,சுற்றுக்கள் – கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பகடிக்கதைகளுக்குரிய வரிக்குவரி கொண்டாட்டத்துடன் ஆரம்பித்து சட்டென்று வேறெங்கோ சென்று ஆவேசமான ஒரு குரலாக மாறி ஒரு நீண்ட பெருமூச்சாக முடிந்தது லூப் கதை.   ஞானம் – ஆரோக்கியம் இருவருக்கும் நடுவே நடக்கும் உரையாடல் அன்றைய தொழில்சூழலை காட்டியது. என் அப்பா மின்வாரிய ஊழியர். அவர் டேய் என்று கூறி தன் சக ஊழியர்களை அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்று அலுவலகச் சூழலே மாறிவிட்டது. இன்று பல அலுவலகங்களில் ரிட்டயர்மெண்ட் பார்ட்டி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130642/

லூப், பெயர்நூறான் -கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஒரு தொழிற்சூழலில் இருந்து இத்தனை கதைகள் தொடர்ச்சியாக வெளிவருவது தமிழில் இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ஒரு தொழிற்சூழலில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் சில நாவல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை குறியீடாக ஆக்கி கவித்துவமாக எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இல்லை. நான் கட்டுமானத்துறையில் வேலைபார்க்கிறேன். இந்த தளத்தின் குறியீட்டுத்தன்மையைப் பற்றி நான் நிறையவே யோசித்திருக்கிறேன். குறிப்பாக எடையை ஒவ்வொரு பொருளும் தாங்குவது, அதன் எல்லை இதையெல்லாம் அற்புதமான கதைகளின் கருக்களாக …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130623/

குருவி, லூப்- கடிதங்கள்

குருவி [சிறுகதை]   அன்புள்ள ஜெ   குருவி கதை படித்தேன். இந்த வரிசை கதைகளில் இதேபோன்ற எளிமையான நேரடியான கதைகளே எனக்கு மிகவும் பிடிக்கின்றன. இந்தக்கதையை நான் வேறு ஒருவகையில் என் மகனுக்குச் சொன்னேன். அவனுக்கு ஐந்து வயது. அவனுக்கு அந்தக்கதையின் சாராம்சம் புரிந்ததைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே எழுதிய லூப் கதையையும் அவனுக்குச் சொல்லியிருந்தேன்.   கொரோனாக்கதைகளில் இந்தவகையான சில கதைகள் கிளாசிக் வகை. கிளாசிக் வகை கதையை எந்த வடிவிலும் சுருக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130639/

லூப் ,சூழ்திரு -கடிதங்கள்

  சூழ்திரு [சிறுகதை] அன்புள்ள ஜெ   கொரோனோக் காலக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய கதை அற்புதமான ஒன்று. அதிலுள்ள ஒரு connoisseur வாழ்க்கை. அது நான் ஐரோப்பா போன்ற ஒரு நாகரீக உச்சம் அடைந்த நாட்டில்தான் இருக்கும் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். ஒரு சின்ன ஊரில் சாப்பாடு சங்கீதம் யானை என்று எல்லாவற்றிலும் ஒரு உயர்ந்த ரசனையுடன் இருந்திருக்கிறார்கள். அந்த நுட்பமான ரசனை திகைப்பை அளித்தது. அந்த வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக அனுபவிக்கிறார்கள்   ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130635/

அனலுக்குமேல், லூப் -கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   என்னதான் சீரியசான கதைகள் வந்தாலும் லூப் போன்ற கதைகள் அளிக்கும் விடுதலையே வேறுதான். எத்தனை மனிதர்கள் ஒரு சின்ன கதைக்குள்ளே. பாம்பைக்கண்டதும் கடவுளைக் கூப்பிடும் கம்யூனிஸ்டு பெண்மணி, யதார்த்தமாக “பாம்புசாமி” என்று சொல்லும் காணிக்காரன் “தோனே பெரிய பாம்பு ஞங்கா பிடிச்சது” என்று பெருமையை விட்டுக்கொடுக்காத துணைக்காணிக்காரன்   ஞானத்தின் கதாபாத்திரம் அற்புதமாக வந்துள்ளது. அவருடைய ஈஸினெஸ் அபாரமானமானது. “அப்பன் பனையிலே இருந்து விளுந்தா கோளிக்காலு கடிக்கலாம்னு நினைக்காதீக” என்று …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130613/

லூப் [சிறுகதை]

நான் ஃபோனில் “ஃபுல் லூப்பு சார்!” என்றேன் “டேய், நம்ம கிட்ட வெளையாடாதே கேட்டியா? கெளம்பிவந்தேன்னா பாரு” என்றார் ஞானம் சார். “வேணுமானா வாருங்க. வந்து நீங்களே பாருங்க… நான் என்னத்துக்கு பொய் சொல்லணும்?” என்றேன். “நீங்க ஆரு, சர்ச்சிலே பாவமன்னிப்பா குடுக்குதீக? பொய்யச் சொல்லுகதுக்கு?” ஞானம் சார் சிரித்துவிட்டார். “மக்கா. இஞ்சபாரு. என்னையப்போட்டு கொல்லுதானுக. வெள்ளைக்காரன் நேரா மெட்ராஸுக்கே விளிச்சுப்போட்டான். ஜிஎம் என்னைய தந்தைக்கு விளிச்சாரு.” “என்னன்னு விளிச்சாரு?” என்று ஆவலாக கேட்டேன். “அதை உனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130405/