Tag Archive: மாயப்பொன் [சிறுகதை]

பிடி, மாயப்பொன் – கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ, நலம்தானே? மாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான செய்திகளும் கதாபாத்திரங்களும் இருந்தாலும் அது ஒரு நீளமான கவிதைதான். மாயப்பொன் என்ன? பொன்னிறமாக சொட்டுவதுதான். அது தியானம். தியான அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும். நாம் தேடினால் சிக்காது. கவனித்தால் மறைந்துவிடும்.நினைக்காதபோது வந்து நம் அருகே அமர்ந்து நம்மை ஆட்கொண்டுவிடும். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130932/

பிடி,மாயப்பொன் – கடிதங்கள்

பிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதை குருவி, இறைவன் போன்று கலைஞர்களின் வரிசையில் வரும் ஒன்று. இங்கே அனுமன் பக்தனுக்காக இறங்கி வருகிறான். நான் ஒன்று பார்த்திருக்கிறேன். உடல்வலிமை குறைவானவர்களுக்கு பயில்வான்கள்மேல் அப்படி ஒரு மோகம் இருந்துகொண்டிருக்கும். அவர்கள் அனுமனை வழிபடவேண்டும் என்று சொல்லுவார்கள் [ பயம் உள்ளவர்கள் நரசிம்மரை வழிபடவேண்டும் என்பார்கள்] அந்த பலவீனமான கிழவருக்காக இரங்கி வருகிறார். இயல்பாக என்ன பாட்டு வேணும் சொல்லுங்கோ என்கிறார். இந்தக்கதையை உயிர்ப்புள்ளதாக ஆக்குவது அந்த சரியான …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130995/

வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெ, பி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா? ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில் அமைந்த கதைகள் என்ற பொது அம்சம் உண்டு. ஆனால் ஒரே தொழிலுக்குள் அமைந்த கதைகள் இல்லை. வணிக எழுத்தில் ஆர்தர் ஹெய்லி மாதிரி தமிழில் பி.வி.ஆர் அந்தக்காலத்தில் நீதிமன்றம் ஆஸ்பத்திரி எல்லாம் பின்னணியாக வைத்து கதைகளை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130872/

பத்துலட்சம் காலடிகள்,மாயப்பொன் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஔசேப்பச்சன் என்ற பெயரை எப்படிச் சொல்லவேண்டும்? அது கிறிஸ்தவப்பெயரா என்ன? நண்பர்கள் நடுவே ஒரு சர்ச்சை. ஆகவேதான் எழுதுகிறேன் சங்கர் *** அன்புள்ள சங்கர் அராமிக் மொழியில் ய என்பது கிரேக்க மொழியில் ஜ ஆகும். யேசு அப்படித்தான் ஜேசு ஆகி ஜீசஸ் ஆனார். யோசேப் மருவி ஜோசப் ஆனார். ஆனால் கேரளக் கடற்கரையில் கிறிஸ்தவம் அராமிக் மொழியிலிருந்தே வந்தது. ஆகவேதான் பல பெயர்கள் விந்தையாக உள்ளன. யோசேப் அச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130832/

மாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ மாயப்பொன் தொந்தரவு செய்த கதை. நான் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. நான் என் வாழ்க்கை முழுக்க ஒரு மாயப்பொன்னைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடைந்ததில்லை. என்னிடம் எல்லாருமே சொன்ன ஒன்று உண்டு, இதெல்லாம் வேலைக்காவாது. பிழைப்பைப்பாரு. மாயப்பொன் தேடுபவர்கள் எவரானாலும் அதைத்தான் சொல்வார்கள். அதைத்தான் சாதிச்சிட்டியே, உன்னால இவ்ளவு முடியுமே, அப்றம் என்ன? நீ பெரிய இவன்னு நினைச்சுக்கறே. நீ ஒண்ணும் பெரிய சரித்திரபுருஷன் கெடையாது. கையிலே இருக்கிறத விட்டுட்டு அலையாதே. இப்படியே. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130833/

ஆழி,மாயப்பொன் கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ மாயப்பொன் கதையில் இரண்டு ஐயங்கள். கடுத்தா சாமி என்று சபரிமலை ஐயப்பனின் சரணம்விளியில் வருகிறது. இந்தக்கதையில் வரும் கடுத்தா புலிதெய்வம். இரண்டு ஒன்றா? இரண்டு நீங்கள் சாராயம் காய்ச்சுவதை பார்த்திருக்கிறீர்களா? சரவணக்குமார். எம் *** அன்புள்ள சரவணக்குமார், கடுத்தா என்பது பழங்குடிகளின் தெய்வம். புலிதான் அது. பழையகால நாயர்களுக்கு கடுத்தா என்ற பெயர் இருந்தது. கடுவா [ கடு+வாய்] என்றாலும் புலிதான். ஐயப்பனின் புலிவாகனமாக கடுத்தா மாறியது என்பது தொன்மங்களில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130831/

மாயப்பொன் [சிறுகதை]

Savannah Martinez Savannah Martinez saved to Animal Art Golden tiger “ஒண்ணு பிளைச்சா மூணாக்கும்…இப்ப செரியா வரும்னு நினைக்கேன்” என்றான் நேசையன். “நீ என்ன அமிருத சஞ்சீவினியாலே காச்சப்போறே? காச்சுதது நாடன் சாராயம். மலைச்சரக்கு. அதில என்ன சயன்ஸு மயிரு… ? எனக்கு வேண்டியது எளுவது லிட்டர் எரிப்பன்.நான் நாளைக்களிஞ்சு மத்தநாள் அருமனை அண்டியாப்பீஸிலே எறக்கியாகணும்…உன்னால முடியுமான்னு சொல்லிப்போடு. முடியல்லேன்னா நமக்கு ஆளிருக்கு” என்றான் லாத்தி மாணிக்கம் “அது நான் செரியாக்கித் தாறேன். செய்யுதத …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130648/