Tag Archive: மதுரம் [சிறுகதை]

மதுரம்,பிடி -கடிதங்கள்

பிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதை ஒரு கள்ளமில்லாத கலைஞனின் சித்திரம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அதையே தொடர்ந்து சென்று அந்த கடைசிவரியில் “எனக்கா?”என்று ஊனமுற்ற கிழவர் கேட்கும்போது கதை வேறு ஒரு முழுமையை அடைவதை உணர்ந்தேன். மீண்டும் கதையை வாசித்தேன். கதையின் மைய வரியே ‘நன்னு பாலிம்ப’ தான் .அது பலமுறை வருகிறது. தியாகையரைப் பார்க்க ராமனே நடந்துவந்தான். தெய்வம் பக்தரை அறியும், தேடிவரும். அடுத்த வரி ‘நீர் அனுமார்’ என்பது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130924/

ஆட்டக்கதை, மதுரம் – கடிதங்கள்

மதுரம் [சிறுகதை] அன்புள்ள ஜெ மதுரம் கதையைப்போல ஓர் அனுபவம் எனக்கு உண்டு. நான் சின்னப்பையனாக ஊரில் இருந்தபோது எங்கள் நாய் குட்டிபோட்டது. மூன்று குட்டிகள். அவற்றில் ஒன்றைத்தவிர மற்றவற்றை கொடுத்துவிட்டோம். ஆனால் மிஞ்சிய அந்தக்குட்டி காலையில் செத்துக்கிடந்தது. நாய் அவ்வளவு துக்கமடையும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. நாயின் இயல்பை நான் தெரிந்திருக்கவில்லை. அழுதுகொண்டே இருந்தது. அப்போது என் அக்கா ஒரு விஷயம் செய்தாள். அப்போது எங்கள் வீட்டில் ஒரு பூனை குட்டிபோட்டிருந்தது. அந்த நாயின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130803/

மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

மதுரம் [சிறுகதை] அன்புள்ள ஜெ மதுரம் கதையை சொல்லும்போதே அருமையான ஒரு கதையாக ஆகிறது. நான் என் வீட்டில் குழந்தைகளுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். அதிலுள்ள ஆசானின் குறுக்குச்சால்களை விட்டுவிட்டேன். அந்த எருமையை வாங்கப்போவது, அதன் பிரச்சினைகள் [ பெருவட்டர் மனுசச் சாணியில் விழுவது] எல்லாம் சொல்லி ஆசான் வந்து தீர்வு அளிப்பதைப்பற்றிச் சொன்னேன். குழந்தைகள் அப்படியே திரில் ஆகி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல கிளாஸிக் சிறுகதை என்பது கதையின் எந்த வடிவத்திலும் நிலைகொள்வது என்று இங்கே எவரோ …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130839/

மதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

மதுரம் [சிறுகதை] அன்புள்ள ஜெ மதுரம் கதையின் மையம் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது. ஒரு பிளைண்ட் ஸ்பாட் எல்லாருக்குமே இருக்கும். அதை எப்படி இனிமையாக்கிக் கொள்வது என்பதுதான் முக்கியமான கேள்வி அந்தக்கதையில் எருமை இனிமையை அடைவது மகன் வழியாக. ஆனால் மதுரம் கதை முழுக்க பரவியிருக்கிறது. ஆசான் மதுரம் தேடி பழைய காதலியை சென்று பார்க்கிறார். எருமைக்கு இருக்கும் மதுரத்தை விட கரடி நாயருக்கு இன்னும் மதுரம் இத்தனை இனிப்பு இருக்கு உலகில், குருட்டுத்தனம் நம்மை மறைக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130802/

மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

சூழ்திரு [சிறுகதை] அன்புள்ள ஜெ சூழ்திரு ரசனையைப் பற்றிய கதை அல்ல. வாழ்க்கைப் பார்வையைப் பற்றிய கதை. முன்பு ஒரு கட்டுரையில் ‘எல்லாமே கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருந்தீர்கள். இரண்டு வகையான மனநிலைகள் உள்ளன. எல்லாமே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு மனநிலை. கரடிநாயரும் நண்பர்களும் அந்த மனநிலையில் இருக்கிறார்கள். நாம் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இன்னொருவகை. அவர்களைத்தான் நாம் இண்டஸ்டியஸ் பீப்பிள் என்கிறோம். இன்றைய முதலாளித்துவச் சமூகத்திற்கு அத்தகையவர்கள்தான் தேவைப்படுகிறார்கள் நான் அவ்வப்போது என் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130788/

மதுரம் [சிறுகதை]

  அச்சு ஆசானை நான்தான் கூட்டிவரச்சென்றேன். அவர் தன் வீட்டின் மண்திண்ணையில் காலைநீட்டி அமர்ந்து பீடிபிடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் யாருமில்லை. அந்நேரத்தில் அவருடைய பேரனும் குடும்பமும் தோட்டத்தில் இருக்கும். ஆசான் அவரைச் சூழ்ந்து காறித்துப்பியிருந்தார்.நடுவே பீடித்துண்டுகள் கிடந்தன. “என்னவாக்கும் பிள்ளே சங்கதி?” என்று அவர் கேட்டார். “லச்சுமிக்கு சொகமில்லை” என்றேன் “ஆருக்கு?” ‘லச்சுமிக்கு” “என்ன செய்யுது?” “சவிட்டு முட்டு எல்லாம் உண்டு. இந்நா இப்பம் அப்புவண்ணனை முட்டி போட்டிருக்கு… ” “ஓ” என்றார் ஆசான் ‘அப்ப சொகமில்லாத்தது அப்புவுக்கில்லாடே?” …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130616/