Tag Archive: போழ்வு [சிறுகதை]

போழ்வு, சீட்டு- கடிதங்கள்

போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ, போழ்வு சிறுகதையை ஒரு குறுநாவலாகவே வாசிக்கவேண்டும். அது ஓர் உச்சத்தில் மையம் கொள்கிறது. அது வேலுத்தம்பியின் ஆளுமைப்பிளவு. ஆனால் கதையில் உள்ள சரடுகள் பல. அவர் ராஜா கேசவதாஸின் ஆளுமையில் மயங்கியவர், அவரைப்போலவே ஆக விரும்புபவர். ஆனால் அவர் அவரை தாண்டிச்செல்கிறார். ராஜா கேசவதாஸை கொல்வதுதான் அவர் மருமகனைக் கொல்வது திருவிதாங்கூர் சுரண்டப்படுவதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். அவரே திருவிதாங்கூரைச் சுரண்ட ஆரம்பிக்கிறார். மெக்காலேயை பயன்படுத்த நினைத்தவர் மெக்காலேயால் பயன்படுத்தப்படுகிறார். அது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131371/

போழ்வு, பலிக்கல்- கடிதம்

[வேலுத்தம்பி தளவாய்- ஆவணப்படம்] போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ போழ்வு கதை ஒரு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. ஏனென்றால் வீரநாயகர்களை எனக்கும் பிடிக்கும். நானும் சின்னவயசில் கோஷம் போட்டு அலைந்தவன். சம்பந்தமே இல்லாத இன்னொரு சூழலில் இன்னொரு வரலாற்றை படிக்கும்போது நமது பிடரியில் அடிப்பது போல தோன்றுகிறது விக்கியில் படிக்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது. கட்டப்பொம்மன், பழசிராஜா அனைவருமே பிரிட்டிஷாருக்கு கொஞ்சநாள் விசுவாசமாக இருந்தவர்கள்தான். பிரிட்டிஷார் ரொம்ப நெருக்கியபோதுதான் அவர்கள் எதிராக திரும்பியிருக்கிறார்கள். வேலுத்தம்பியும் அப்படித்தான் எல்லா மாவீரர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131354/

போழ்வு,முதல் ஆறு- கடிதங்கள்

போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ போழ்வு இந்த வரிசையில் நீங்கள் எழுதிவரும் 80 சதவீதம் வரலாறு எஞ்சியது புனைவு வகையான கதைகளில் ஒன்று. விக்கிப்பீடியாவுக்குச் சென்று வேலுத்தம்பி தளவாய் பற்றி வாசித்தேன். அவர் கேரளத்தின் தேசியவீரர். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிட குண்டரை விளம்பரம் என்ற அறிவிப்பில்தான் தேசியம் பற்றிய முதல்குறிப்பு உள்ளது. அந்த நால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இந்தக்கதையில் நீங்கள் சொல்லியிருப்பவையும் உண்மை. கிருஷ்ணபிள்ளையை அவர் கொன்ற விதம் வரலாற்றில் உள்ளது. வெள்ளைக்காரர்களுடன் நெருக்கமாக …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131294/

போழ்வு, பலிக்கல்- கடிதங்கள்

போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ, “போழ்வு”கதையை படித்தேன் . என் கிராமத்தில் பழைய தலைமுறை வீடுகளில் சில இன்றும் இருக்கிறது. அங்கு சாலை வழியாக கடந்து செல்வோர் கண்களில் படும் நிலையில் சமீப காலம்வரை சில பெரிய படங்கள் சுவரில் கம்பீரமாக வைத்திருப்பார்கள். அதேபோன்று நாயர்கள் வைத்திருக்கும் கடைகளிலும் ஸ்ரீராமன், மன்னத்து பத்மநாபன், வேலுத்தம்பி தளவாய் படங்களை பெரிய கட்டி மர சட்டம் உடைய படங்கள் மாட்டி வைத்திருப்பார்கள்(இப்போது அதிகமாக காண்பதில்லை). இப்பொழுதும் அது இருக்கும் இடங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131290/

போழ்வு [சிறுகதை]

கொல்லத்திலிருந்து நான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர ஒரு பகலும் ஓர் இரவும் ஆகியது. காயல் வழியாக கொச்சுவேளி வரை படகில் வந்தேன். மூங்கிற்பாயால் வளைவான கூரையிடப்பட்ட படகில் பகல் முழுக்க கரையோரமாக ஒழுகிச்சென்ற தென்னைமரக் கூட்டங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவை தொலைவிலிருந்து பார்த்தபோது புல்பத்தைகள் போல தோன்றின. கோடைகாலமாதலால் நீர் நீலத்தெளிவுடன் இருந்தது. அதில் அவ்வப்போது பச்சைத்தீவுகள் போல பாசிப்பரப்புகள் மிதந்து சென்றன. இங்கெல்லாம் படகில் பாய்கள் இல்லை. துடுப்பு போடுவதுமில்லை. நீண்ட மூங்கில்கழிகளால் அடிநிலத்தில் ஊன்றி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131030/