Tag Archive: பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும்,முத்தங்கள் -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] மதிப்புக்குரிய ஆசிரியருக்கு, திபெத்திய புத்த பிக்குகள், பல நாட்களாக வரையும் வண்ண கோலம் – காணொளி பார்க்க நேர்ந்தது. முடிவில், அவர்களே அதை அழித்து, ஒன்றும் இல்லாது ஆக்கும்போது , ‘  பொலிவதும் கலைவதும்   ‘ நினைவில் எழுந்தது . மிக்க நன்றி . -ஓம் பிரகாஷ் *** அன்புள்ள ஜெ பொலிவதும் கலைவதும்தான் உங்களுக்கு பிடித்த தலைப்பு என்று எழுதியிருந்தீர்கள். எனக்கும்தான். அந்த தலைப்பு ஒரு அற்புதமான கவிதைபோல ஒரு மந்திரம்போல மனசுக்குள் ஓடிக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131414/

லூப்,பொலிவதும் கலைவதும் – கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   நலம்தானே?   லூப் கதையை சிரிப்புடன் படித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி என்ன சிரிப்பு என்று கேட்டாள். கதையை சொன்னேன். அந்தக்கால டெலிபோனைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருந்தது. இரண்டு கம்பிகள் வழியாக ஃபோன் போகும் என்பதெல்லாம்கூட இன்றைக்கு யாருக்கும் தெரியவில்லை. சிரித்து கண்ணீர்மல்கினோம்   இந்தக்கதையின் மையம் இத்தனை தொழில்நுட்பம், வளர்ச்சி நடுவே நாம் உயிர்ச்சூழலை ஏன் இணைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான். இவ்வளவு ஃபோன் இருக்கே, ஒரு மலைப்பாம்பு லூப்பும் இருக்கட்டுமே என்றுதான் ஞானம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130622/

பொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   பொலிவதும் கலைவதும் பலருடைய மனதையும் நெகிழச்செய்த கதையாக இருப்பதைக் கண்டேன். என் நண்பர்களிலேயே பலருக்கு அந்தக்கதை ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. இத்தனைக்கும் பலருக்கும் கதை வாசிக்கும் அனுபவமே இல்லை   ஏன் அந்தக்கதை அப்படி பாதிக்கிறது என்று சிந்தனை செய்தேன். காதல் கண்டிப்பாக ஒரு விஷயம்தான். ஆனால் அது மட்டும் அல்ல. முக்கியமான விஷயம் திரும்பிச் செல்வதுதான். அந்தக்கதையின் முக்கியமான குறிப்பு அவன் மாமா வீட்டுக்கு அடிக்கடி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130508/

சுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

    பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதை மனதை ஆழமான ஓர் உணர்வை நோக்கிச் செலுத்தியது. காதல் என்ற உணர்வைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது பல்ப் ஃபிக்‌ஷனுக்குரிய மெட்டீரியலாக ஆகிவிட்டது. ஆகவே இலக்கியத்தில் அதைப்பற்றி எழுதுவது இல்லாமலாகிவிட்டது. ஆனால் இலக்கியத்தில் என்றென்றும் காதல் பேசப்படும். காமத்தைவிடவும்கூட பேசப்படும்.   ஏனென்றால் சாவு போல காதலும் ஒரு தீர்க்கமுடியாத மானுடப்பிரச்சினையை பேசுகிறது. ஒரு ஆணும்பெண்ணும் எப்படி கண்டடைகிறார்கள் எப்படி பிரிகிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130506/

வேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதையை ஆழ்ந்த மனநிலையுடன் வாசித்தேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையை அது காட்டியது. இன்றைக்கு முப்பது வயதானவர்களில் ஒருசாராருக்கு  அந்த அனுபவம் இருக்கும். மீண்டும் சந்திப்பது மிகமிக துன்பமான ஒன்று. ஆனால் அதை தவிர்க்கமுடிவதும் இல்லை. ஏனென்றால் அதை நாடியே செல்கிறோம். துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்வது போன்ற அனுபவம் அது. ஆனால் அது ஒரு இன்பமாக நினைவில் மாறிவிடுகிறது. அந்த இன்பத்துக்காக அந்த தருணத்தின் துன்பத்தை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130505/

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

களமெழுத்து பாட்டு திங்கள்கிழமை என்று அப்புமாமா கடிதத்தில் எழுதியிருந்தார். ஆனால் அது நினைவில் பதியவில்லை.நான் அங்கே போகப்போவதில்லை என்பதனால் வழக்கமான அன்புச் சொற்களை மட்டும்தான் படித்தேன். அம்மா “ஒருதடவை போய் பாத்துட்டு வாடா. மாமியும் உன்னை திரும்பத் திரும்ப கேட்டா” என்றாள். “இருக்கிறதே எட்டுநாள்… அதிலே சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போக ஆரம்பிச்சா அப்றம் அவ்ளவுதான்…” என்றேன். “எல்லா வீட்டுக்குமா போகச்சொன்னேன். உன்னோட தாய்மாமா.” “அதுக்கென்ன?” “தாய்மாமான்னா தந்தையோட எடம்.” நான் ஒன்றும் சொல்லவில்லை. சொந்தம் பாசம் போன்றவை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130371/