Tag Archive: பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல்[சிறுகதை] அன்புள்ள ஜெ, பலிபீடம் நெஞ்சை கனக்கவைத்த கதை. மனித வரலாறு தோன்றிய நாள் முதல் மனிதன் கேட்டுக்கொள்ளும் கேள்வி- இங்கே நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றுதான். இல்லவே இல்லை என்றுதான் பாதிப்பெர் சொல்வார்கள். சரி, அப்படியென்றால் நீ எதை நம்பி வாழ்கிறாய், நீதி வேண்டும் என்று எவரிடமும் நீ கேட்டதே இல்லையா என்று கேட்டால் விழிப்பார்கள். எப்படியும் ஒருவாரத்திற்கு ஒருமுறையாவது நாம் நீதி வேண்டும் என்று கேட்கிறோம். இது நீதி இல்லை என்று குமுறுகிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131375/

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல்[சிறுகதை] அன்புள்ள ஜெ மனசாட்சியை துளைக்கும் இன்னொரு கதை பலிக்கல். அது ஒரு தெளிவை அளிக்கவில்லை. தெளிவில்லாத ஒரு பெரிய சக்தியை அடையாளம் காட்டுகிறது. திட்டவட்டமான விதிகளின்படி இந்த பூமி செயல்படுகிறது என்று எவரும் சொல்லமாட்டார்கள். பாவபுண்ணிய விதிகள் எல்லாம் தராசுத்தட்டு மாதிரி துல்லியமானவை அல்ல. ஆனால் ஏதோ ஒன்று இல்லாமலும் இல்லை. இந்த மர்மம்தான் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது பாவபுண்னியத்தால் அல்ல நாம் அறியாத வேறொரு அலையால் இந்த வாழ்க்கை அலைக்கழிகிறது. இதில் நம்முடைய அன்றாடச் சின்ன …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131219/

கடிதங்கள்,பதில்கள்

வணக்கம் சார், அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும் கனத்தை தந்தது. சோற்றுக்கணக்கில் நீங்கள் சம்பவங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் எனக்கு ஆத்திரம் அடைத்து கொண்டு வந்தது. அப்படியே நீங்கள்  உங்களது குரலில் என் முன்னாலமர்ந்து சொல்லுகிறீர்கள் நான் கேட்டவாறு இருக்கிறேன் என்று எடுத்துக்கொண்டேன். பின்பு ஓலைச்சிலுவை நீங்கள் சொற்களை பிரவாகமாக …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131172/

பத்துலட்சம் காலடிகள்,மாயப்பொன் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஔசேப்பச்சன் என்ற பெயரை எப்படிச் சொல்லவேண்டும்? அது கிறிஸ்தவப்பெயரா என்ன? நண்பர்கள் நடுவே ஒரு சர்ச்சை. ஆகவேதான் எழுதுகிறேன் சங்கர் *** அன்புள்ள சங்கர் அராமிக் மொழியில் ய என்பது கிரேக்க மொழியில் ஜ ஆகும். யேசு அப்படித்தான் ஜேசு ஆகி ஜீசஸ் ஆனார். யோசேப் மருவி ஜோசப் ஆனார். ஆனால் கேரளக் கடற்கரையில் கிறிஸ்தவம் அராமிக் மொழியிலிருந்தே வந்தது. ஆகவேதான் பல பெயர்கள் விந்தையாக உள்ளன. யோசேப் அச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130832/

ஆழி, பத்துலட்சம் காலடிகள் -கடிதங்கள்

ஆழி [சிறுகதை] அன்புள்ள ஜெ நான் ஆழி கதையை மிக எளிமையாக புரிந்துகொண்டேன். காதலர்கள் பிரிய நினைக்கிறார்கள். பிரச்சினை வருகிறது, பெண் ஆற்றலுடன் ஆணை காப்பாற்றுகிறாள். அவள் அவனைவிட வலுவானவள். அதுதான் கதையின் மையம் என்று ஆனால் கதையின் தலைப்பு ஆழி என்றதும்தான் என் வாசிப்பின் போதாமையை உணந்தேன். அந்த வாசிப்பு ஏன் என்று உடனே எனக்குப் புரிந்தது. அது இங்கே நம்முடைய சாதாரண வணிகக்கதைகளில் உள்ள வழக்கமான டெம்ப்ளேட். உடனடியாக நம் மனம் அதைத்தான் சென்றடைகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130826/

பத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் இன்னும் நெடுங்காலம் வாசிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் மிகப்பெரிய பல எந்த முயற்சியும் இல்லாமல் குருவி கூடுகட்டுவதுபோல மிகச்சிக்கலாக உருவாகி வந்திருக்கும் அடுக்குகள்தான் [குருவி கதையை வைத்தே இதைச் சொல்கிறேன்] உம்பர்ட்டோ ஈக்கோ போன்றவர்கள் இந்த துப்பறிதல் என்ற வடிவத்தை ஏன் கையில் எடுத்தார்கள் என்றால் அது பண்பாடு வரலாறு தனிநபர் ஆகிய பலகதைகளை ஒன்றாகக் கோத்துக்கொண்டே போகும் வசதி கொண்ட வடிவம் என்பதனால்தான். இந்தக்கதையிலேயே ஔசேப்பச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130807/

பத்துலட்சம் காலடிகள்-விவாதம்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் கதை பற்றி இணையத்தில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது, வழக்கமான சாதியக் காழ்ப்புகள் கொப்பளிக்கின்றன. வசைகள், வன்மங்கள். [நல்ல பிறந்தநாள் வாழ்த்துக்கள். நூறாண்டு வாழ்வீர்கள்] இவர்களின் வசைகளைக் கண்டபிறகே நான் அந்தக்கதையை வாசித்தேன். அவர்கள் புரிந்துகொண்டிருப்பதற்கு நேர் எதிரான கோணம் கதையில் இருக்கிறது. இத்தனைபேர் பேசிக்கொண்டிருக்கிறார்களே ஒருவருக்குக் கூடவா அடிப்படை வாசிப்பும், குறைந்தபட்ச ரசனையும் இருக்காது? ஒரு மினிமம் காமன்சென்ஸ் கூடவா இருக்காது? ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கோபித்துக்கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130789/

ஓநாயின் மூக்கு, பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, பத்துலட்சம் காலடிகள் கதை உருவாக்கிய அலை சமீப காலத்தில் தமிழ் தீவிர இலக்கிய உலகில் நிகழாத ஒன்று. ஒரு கலைஞனை எதைக்கொண்டு மூடிவிடமுடியாது என்பதை வெறுப்பாளர்களுக்கு உணர்த்திய கதை அது. அடையாளங்களை போடுவது வெறுப்பைக் கக்குவது என்று செய்து செய்து ஒழித்துவிடலாம் என நினைப்பார்கள். கலை அதன்போக்கில் பீரிட்டு எழுந்து விடும். அதற்குமுன் வாசகன் திகைத்து பிறகு தலைவணங்கிவிடுவான். ஏனென்றால் அவன் என்னவாக இருந்தாலும் அடிப்படையில் கலையை ரசிப்பவன், இலக்கியத்தை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130797/

பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட அபாரமான கதைகளில் ஒன்று. ஒருபக்கம் ஒரு முழுப் பண்பாட்டையே அதன் வரலாறு, மனநிலைகள், அதன் பிரச்சினைகள் அனைத்துடனும் அறிமுகம் செய்கிறது. இன்னொரு பக்கம் தனிமனித துயரத்தின் வழியாகச் செல்கிறது. தனிமனிதன் தன் சாதாரண உணர்ச்சிகளைக் கடந்து மேலே எழும் அபாரமான உச்சத்தைப் பற்றிச் சொல்கிறது. நீங்கள் கதையில் சொல்வதுபோல அப்துல்லா அவர்கள் ஷாஜகான் மாதிரித்தான் தெரிகிறார். மகத்தான கதாபாத்திரம். இந்தக்கதையில் நான் கவனித்தது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130777/

பத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் கதையை படித்துக்கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான நிலைக்கு ஆளானேன். அது கதையாகவே இல்லை. ஒரு அறிக்கை போல முதலில் இருந்தது. எல்லா கோணத்திலிருந்தும் செய்திகளை கொட்டிக்கொட்டி நம்பகமாக ஆக்கிக்கொண்டே சென்று உச்சியில் அந்த அபாரமான மனிதரை நிறுத்திக்காட்டியது. ஒரு புனைவு விளையாட்டு. சமீபகாலமாக பல கதைகளில் முக்கால்வாசி மெய்யான வரலாறு கால்வாசி புனைவு என ஒரு கலவையை திறமையாக செய்கிறீர்கள். இந்தக் கலவையால் மொத்தமும் புனைவாகி விடுகிறது. மொத்தமும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130765/

Older posts «