Tag Archive: நஞ்சு [சிறுகதை]

சீட்டு,நஞ்சு- சிறுகதை

சீட்டு [சிறுகதை] அன்பின் ஜெ சீட்டு கதையை வாசித்தேன். கீழ்நடுத்தரவர்க்கத்திடம் எப்போதுமே ஒரு ஆழமான மெட்டீரியலிஸ்டிக் தன்மை இருக்கும். அவர்களுடைய ஆன்மிகம் கூட மெட்டீரியலிஸ்டிக் ஆனதாகவே இருக்கும். அன்பு காதல் திருமணம் பாசம் எல்லாமே அப்படித்தான். அது வாழ்க்கையின் கஷ்டத்தில் இருந்து வந்த ஒரு இயல்பு. அப்படித்தான் அவர்கள் இருக்கமுடியும். பைசா பைசாவாக சேமிப்பது. இன்னொருத்தரை பிய்த்துப்பிடுங்குவது. எப்போதுமே பைசாக் கணக்கு பார்ப்பது. அவர்களுடைய உலகம் அப்படிப்பட்டது. அந்த உலகத்தின் மிக அழகான சித்திரமாக இருந்தது. யதார்த்தமே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131500/

நஞ்சு, இறைவன் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெ நஞ்சு சிறுகதை ஒரு கசப்பில் முடியும் கதை. நாம் நினைவில் நிறுத்தியிருப்பவை கசப்புகள்தான். ஆகவே நம் வாழ்க்கையை பெரும்பாலும் கசப்புகள்தான் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தான். கசப்புகளை வளர்த்துக்கொள்ளவும் புதிய அர்த்தங்களை அளிக்கவும் மனிதனுக்கு ஒரு இயல்பான மோகம் உள்ளது நஞ்சு கதையில் அந்தப்பெண் அவன் மனதில் பெண் என்று இருந்த இனிமையை இல்லாமலாக்கிவிட்டாள். அது பெரிய ஒர் இழப்பு. இது பலருக்கும் நிகழும். பலசமயம் மனைவியிடமிருந்தே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131482/

ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்

ஐந்து நெருப்பு[ சிறுகதை] அன்புள்ள ஜெ ஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள் வந்த வழியைச் சொல்வதில்லை. ஆனால் தீரவிசாரித்துப் பார்த்தால் மனம் கொந்தளிக்கவைக்கும் பலவிஷயங்கள் தெரியவரும். இந்தக் கதையில் வருவதுபோல மூன்றுபக்கம் நெருப்பு. ஆகவே முள்ளில் குதிக்கிறார்கள் மிக மிக யதார்த்தமான கதை. ஆனால் கதை வாசித்து பலநாட்களுக்கு பிறகு முள்மேல் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131373/

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன் தொடர்ச்சி தான் அடுத்த கதை என்று படுகிறது. ஆனால், முறை மட்டும் மாறிவிட்டது. சீட்டு முதல் பாகம், அதன் தொடர்ச்சி நஞ்சு. சீட்டு கதையின் நாயகன் அழகப்பன் சித்தரம் தெளிவாக காட்டப்படுகிறது. அவன் அம்மா, இப்போதாவது ஆணாக நடந்துகொள் என்று சொல்லும்போது, …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131352/

நஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை] இனிய ஜெயம் நஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இனிமையை ஏந்தி இருக்கலாம். எது மறித்தது? அவளை மன்னிப்புக் கேட்க சொல்லி காலில் விழவைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவளுக்கு இந்த நிலையை அவன் அளிப்பது … இனிமையில் திளைப்பதை விடவும், நஞ்சு பெய்வது மேலும் இனிமை கொண்ட ஒன்றா? …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131296/

நஞ்சு, காக்காய்ப்பொன் -கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் விதவிதமான கருக்கள், களங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வைகளும் மாறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கென வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைப்பார்வை என்ற ஒன்றில் கட்டுண்டது அல்ல எழுத்தாளனின் எழுத்து. அது அந்தந்த தருணங்களில் இயல்பாக வெளிப்படுவது என்று நீங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறீர்கள். நற்றுணை போன்ற ஒரு கதையை வாசித்தவருக்கு நஞ்சு கதை அதிர்ச்சியையேதரும். அது மானுட மனதிலே உள்ள அழியாத நஞ்சைப் பற்றிச் சொல்வது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131241/

நஞ்சு [சிறுகதை]

நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள். என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130936/