Tag Archive: தேவி [சிறுகதை]

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முதலில் அந்த நாடகம் எனக்கு அப்படி ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. ஜெ, நான் ஒரு சிறிய ஊரிலேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட இருந்தேன். மதுரைப்பக்கம் கிராமம். அங்கே எந்தவகையான சமூக வாழ்க்கையும் கிடையாது. கூத்து திருவிழா எதுவுமே இல்லை. எல்லாமே குடியும் சாதியரசியலும் மட்டும்தான். ஆகவே இந்த பொற்காலத்தை வாசிக்கும்போது பெரிய ஏக்கம் வந்தது மீண்டும் வாசிக்கும்போது அதைவிட முக்கியமானது அந்த நாடகத்துக்கு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131781/

கூடு, தேவி- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ   கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான objectiveness உள்ளது. அது வேறு ஒரு அனுபவம். இதிலுள்ளது subjectiveness இது அந்தக்கதைக்குள் ஒரு கதாபாத்திரம் செய்யும் பயணம். ஆகவே அவருடைய மனநிலைக்கு ஏற்ப ஒருவகையான குறியீட்டு அர்த்தமும் உணர்ச்சிகளும் வந்துவிடுகிறது கதையில் அந்தக்கதாபாத்திரம் ஆன்மீகமாக பயனம் செய்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131497/

நிழல்காகம்,தேவி- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி ஒரு கொண்டாட்டமான கதை. சரளமான நகைச்சுவையுடன் ஆரம்பித்து முதிர்ந்தபடியே சென்று ஒர் உணர்ச்சிநிலையில் முடிகிறது. மொத்த நாடகத்தையுமே ஸ்ரீதேவி மாற்றியமைக்கிறார். அவரே அதை நடித்து வெற்றிகரமாக ஆக்குகிறார். ஆனால் புகழ் முழுக்க அனந்தனுக்கு. அவனை பாராட்டித்தள்ளுகிறார்கள். அவனுக்கே அது அவனுடைய வெற்றி அல்ல என்று தெரியவில்லை. ஸ்ரீதேவி மூன்றுவேடங்களில் நடித்ததனால் அவருடைய உண்மையான திறமையைக்கூட ஊர்க்காரர்கள் உணரவில்லை. சொல்லப்போனால் அனந்தன், லாரன்ஸ் தவிர எவருக்குமே அது ஸ்ரீதேவியின் வெற்றி என்று …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131551/

தேவி,லாசர்- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி மிக உற்சாகமாக வாசித்த கதை. எல்லாருக்குமே ஒரு நாடக அனுபவம் இருக்கும். குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது நாடகத்தில் நடித்திருப்பார்கள். அது ஒரு கோலாகலமான அனுபவம். அந்த நினைவை அந்தக்கதை மீட்டியது. ஆனால் அதை விட முக்கியமானது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து குழந்தைகள் வெளியே வருகிறார்க்ள். ஒவ்வொருவரும் வெவ்வேறுவகையிலே வெளிப்படுகிறார்கள் தேவி கதையில் மூன்று கதை இருக்கிறது. ஒருகதை அனந்தன் நாடகம்போட படும் அவஸ்தை. இன்னொரு அவன் நாடகத்திற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131493/

தேவி, சிவம்- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி உற்சாகமான ஒரு கதை. ஒருவகையில் இது ஒரு Coming of age கதை என்று சொல்லலாம். லாரன்ஸின் முதிர்ச்சியின் கதை. அவனுக்கு முதலில் பெண் என்பவள் ஒரு வெறும் உடல்தான். காமம்தான் அவனை செலுத்துகிறது. அவன் தேடுவது ஹீரோயினைத்தான். ஆனால் ஸ்ரீதேவி வந்து முப்பெரும்தேவியராக மேடையில் தோன்றுகிறாள். காதலி அம்மா வில்லி என மூன்று முகம். அப்படியே சூழ்ந்துகொள்கிறாள். அவளை ஒன்றுக்குள் ஒன்றாகவே அவன் பார்க்கிறான். காதலியில் அம்மாவும் வில்லியும். வில்லியில் அம்மாவும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131486/

தேவி,நற்றுணை -கடிதங்கள்

தேவி [சிறுகதை] வணக்கம் ஜெயமோகன். மூன்று நான்கு நாட்களாக வாசிக்கவும் அணுகவும் ஒன்றவும் கடினமாக இருந்த கதைகளைப் படித்துவந்த எனக்கு, இன்றைய கதை ‘ தேவி’ நெருக்கமாக இருக்கிறது. முடியலாம் உங்களுக்கு. இதை உங்கள் இடது கையால் எழுதமுடியும் அளவுக்கானது எனக் கூட – உங்களுக்குத் தோன்றாது – உங்களின் தர்க்கபூர்வமான வாசகர்க்குத் தோன்றலாம். ஆனால் இந்தக் கதை முக்கியமான கதை. அந்த ஸ்ரீதேவியாகிய சரஸ்வதி அக்கா முக்கியம், அனந்தன் முக்கியம், லாரன்ஸ் முக்கியம், ஆர்மோனியம் காதர் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131447/

தேவி [சிறுகதை]

“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?” “இல்ல நாடகம்தானே?” என்று அனந்தன் சொன்னான். “நாடகம்னா? வே, நாடகம்தானேன்னு அம்மைய மகன் பெண்டாள முடியுமா? இல்ல கேக்கேன்” லாரன்ஸ் சூடாகிவிட்டான். “நாடகத்தைப் பத்திப் பேசும்வே. சும்மா வாயில வந்தத பேசப்பிடாது. பகவதி இருக்கப்பட்ட ஊராக்கும்” ‘பெட்டி’ காதர் சற்று தணிந்தார். “இஞ்சபாருங்க. நான் பதிமூணு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131081/