Tag Archive: தனிமையின் புனைவுக் களியாட்டு

கதைகளைப் பற்றி…- கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தேன். நான் இலக்கியம் வாசிப்பது என் வாழ்க்கையை நுணுக்கமாகப் புரிந்துகொள்வதற்காக மட்டும்தான். இலக்கியத்தில் இருந்து எனக்கு அழகனுபவம் வேண்டும். வாழ்க்கை தரிசனம் வேண்டும். ஆகவே இலக்கிய சர்க்கஸ்களில் எனக்கு இன்று பெரிய ஆர்வம் இல்லை. நான் வாசிக்க ஆரம்பித்ததே ஆங்கிலத்தில்தான். டெல்லியில் படித்தபோது அயன் ராண்ட் வழியாக இலக்கிய அறிமுகம். அதன்பின் லத்தீனமேரிக்க நாவல்கள். ஐரோப்பிய படைப்புக்கள். இன்றைக்கு ஃபேஷனபிளாக உள்ள எல்லா படைப்புக்களையும் வெறிகொண்டு வாசித்திருக்கிறேன். ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131816/

நிறைவு

இந்தக் கதைகளை எழுதத் தொடங்கியபோது எந்த நோக்கமும் இல்லை. முன்னரே சிறுகதைக்கான உந்துதல் இருந்தது . யாதேவி வரிசை சிறுகதைகளை எழுத தொடங்கியிருந்தேன். நான் சிறுகதைகளை எழுதுவது வெண்முரசின் நடையில் இருந்து வெளியே வருவதற்காகத்தான். என் இயல்பான நடையையும் மனநிலையையும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு. வெண்முரசின் நடை தூயதமிழ், செவ்வியல் பார்வை , கனவுத்தன்மை கொண்டது. அன்றாடத்தை ஒட்டிய நடையையும் யதார்த்தம் சார்ந்த பார்வையையும் புறவயத்தன்மையையும் தக்கவைத்துக்கொள்ள எப்போதுமே முயல்வேன். வெண்முரசு எழுதுவதற்கு நடுவே முப்பதுக்கும் மேல் சிறுகதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131731/

கதைகள் கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெ,   தொடர்ச்சியாக இக்கதைகளை வாசித்த இரண்டு மாதமும் என் வாழ்க்கையில் ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். நான் 1998 முதல் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தவன். அப்போதே காலச்சுவடு உயிர்மை எல்லாம் வாசித்தேன். உங்கள் சொல்புதிதுக்கும் சந்தா கட்டியிருந்தேன். நவீன இலக்கியம் மீது வெறியோடு இருந்தேன். நவீன அமெரிக்க எழுத்தில் ஓர் ஈடுபாடு வந்தது. தொழில் அலைச்சல் என்று விலகிச்சென்றுவிட்டேன். பத்தாண்டுகளில் அவ்வப்போது நீங்கள் எழுதிய சிலகதைகளை வாசித்திருக்கிறேன். ஏழாம் உலகம், இரவு என்ற இரண்டு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131615/

ஆகாயம் [சிறுகதை]

கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை அவருடன் வந்த மிளகுமடிசீலை காரியக்காரர் மார்த்தாண்டன் நீலன் பிள்ளையுடன் கல்லாசாரிகள் வேலைசெய்துகொண்டிருந்த புறமுற்றத்தின் நடுவே நடந்தார். “பாத்து நடக்கணும்… தரை முழுக்க அம்புமுனை வாள்முனை மாதிரி கல்லுடைசல்கள் உண்டு… குத்தினா ரத்தக்கோரையாக்கும். தெய்வ சிற்பங்கள் உள்ள மண்ணு ஆனதினாலே மிதியடி போடக்கூடாது” என்றார் செண்பகராமன் மாடன் பிள்ளை “ஆமா, இரும்புத்துண்டு மாதிரில்லா மின்னுது” என்றார் மார்த்தாண்டன் நீலன் பிள்ளை. சிற்பிகள் கற்களின்மேல் தொற்றி அமர்ந்தும் அருகே மண்டியிட்டும் வேலைசெய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131938/

ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன.பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன அவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131821/

தேனீ [சிறுகதை]

சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும். அது சுசீந்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131744/

முதுநாவல்[சிறுகதை]

இது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாறசாலை ஊரின் அந்திச்சந்தையின் தெற்கு வாசலில் உச்சிகடந்த பொழுதில் ஓர் ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. அதிலிருந்து இடும்பன் நாராயணன் என்ற பெயர்கொண்ட ஏட்டு இறங்கி நின்று உரத்த குரலில் “எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர்? அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131679/

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     முன்தொடர்ச்சி [1 ] கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான். நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன். அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131640/

‘பிறசண்டு’ [சிறுகதை]

  “அப்பன் பாத்து வரணும்… வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான் “பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு…” “விளுந்திருவீக” “நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்… ” அவர் அவன் தோளை பிடித்துக்கொண்டார். வெயில் ஏறியிருந்தது. கண்கள் கூசின. “லே அந்த கிளாஸை எடுலே” “இருங்க”என்றான். டிரைவரிடம் “முருகேசன் அண்ணா, அந்த டாஷ்போர்டிலே ஒரு கூலர் கெடக்கு எடுங்க” என்றான் முருகேசன் அதை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். அதை கண்ணாடிக்குமேலே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131535/

கரு [குறுநாவல்]- பகுதி 2

கரு [குறுநாவல்]- பகுதி 1 –  தொடர்ச்சி…. முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான். சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131519/

Older posts «