Tag Archive: சுற்றுகள் [சிறுகதை]

சுற்றுகள், காக்காய்ப்பொன்- கடிதங்கள்

சுற்றுகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வாசித்து வந்துகொண்டிருக்கிறேன். கதைகளை வாசித்தபின் கடிதங்களையும் வாசிப்பது என் வழக்கம். அவை வாசிப்பின் பலவகையான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இன்றுதான் சுற்றுகள் கதையை வாசித்தேன். அதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். ஒரு நீரோடையை வைத்து இந்தக்கதையை எழுதியிருக்கலாம். ஆனால் அதை நிறையபேர் எழுதியிருப்பார்கள். இப்படி ஒரு தொழிற்சூழலுக்குள் கதையை கொண்டுசென்று எழுத எது நமக்கு தடையாக இருக்கிறது? எலக்டிரானிக் பொருட்கள் கருவிகள் போன்றவை போதிய அளவுக்கு கவித்துவமானவை அல்ல …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131283/

லூப்,சுற்றுக்கள் – கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பகடிக்கதைகளுக்குரிய வரிக்குவரி கொண்டாட்டத்துடன் ஆரம்பித்து சட்டென்று வேறெங்கோ சென்று ஆவேசமான ஒரு குரலாக மாறி ஒரு நீண்ட பெருமூச்சாக முடிந்தது லூப் கதை.   ஞானம் – ஆரோக்கியம் இருவருக்கும் நடுவே நடக்கும் உரையாடல் அன்றைய தொழில்சூழலை காட்டியது. என் அப்பா மின்வாரிய ஊழியர். அவர் டேய் என்று கூறி தன் சக ஊழியர்களை அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்று அலுவலகச் சூழலே மாறிவிட்டது. இன்று பல அலுவலகங்களில் ரிட்டயர்மெண்ட் பார்ட்டி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130642/

பெயர்நூறான்,சுற்றுக்கள்- கடிதங்கள்

பெயர்நூறான் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   பெயர்நூறான் ஒரு அழகான கதை. நேரடியான அனுபவமே இத்தகைய கதைக்கான நுண்மையான observationஐ உருவாக்கமுடியும் என நினைக்கிறேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதுதான். குழந்தை பிறக்கும்போது பயங்கரமான பதற்றம். எனக்கு கத்தார் போக டிக்கெட் போட்டிருந்தேன். அது குழந்தை பிறப்பது தள்ளி தள்ளிபோகும் என்பதனால் கன்ஃபர்ம் ஆகிவிட்டது. அப்போது சட்டென்று வலி. குழந்தை பிறந்துவிட்டது.   நான் அப்போது விமான டிக்கெட்டை பத்துநாள் தள்ளிப்போட முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130559/

சுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

    பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதை மனதை ஆழமான ஓர் உணர்வை நோக்கிச் செலுத்தியது. காதல் என்ற உணர்வைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது பல்ப் ஃபிக்‌ஷனுக்குரிய மெட்டீரியலாக ஆகிவிட்டது. ஆகவே இலக்கியத்தில் அதைப்பற்றி எழுதுவது இல்லாமலாகிவிட்டது. ஆனால் இலக்கியத்தில் என்றென்றும் காதல் பேசப்படும். காமத்தைவிடவும்கூட பேசப்படும்.   ஏனென்றால் சாவு போல காதலும் ஒரு தீர்க்கமுடியாத மானுடப்பிரச்சினையை பேசுகிறது. ஒரு ஆணும்பெண்ணும் எப்படி கண்டடைகிறார்கள் எப்படி பிரிகிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130506/

சுற்றுகள் [சிறுகதை]

ஒருகணம் கிருஷ்ண நாயக் உடல் அதிர்ந்தான். பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, உள்ளங்கால் கூசிச்சுருங்க, சிறிய வலிப்பு ஒன்று ஏற்பட்டது. இதயம் தாளமுடியாத குளிருடன் நின்று பின் வேகமாகத் துடித்தது. நாகவேணி “என்ன?” என்றாள். அவளுடைய கழுத்துத்தசைகள் இழுபட்டிருந்தன. மெல்ல தளர்ந்து மூச்சுவாங்க “நான்..” என்று அவன் விக்கினான். “ம்ம்” என்று அவள் சொல்லி முகம் சுளித்தாள். ஸ்க்ரூ டிரைவரை எடுத்துக்கொண்டு திரும்பி நடந்தாள். கிருஷ்ண நாயக் அவள் செல்வதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் எழுந்தபோது கால்கள் வலுவற்றவை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130378/