Tag Archive: கைமுக்கு [சிறுகதை]

பிடி, கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன. நான் காவல்துறையிலே வேலைபார்த்தவன். கதையில் வருபவை சில எனக்கே தெரிந்தவை. சில விஷங்கள் ஆமாம், அப்டித்தானே என்று எனக்கே ஆச்சரியம் அளித்தவை பொதுவாக கேஸ்விசாரணையிலே ஒரு விஷயம் உண்டு. ஒரு கேஸ் மேல் ஏன் அப்படி ஒரு ஆர்வம் வருகிறது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130926/

கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ.. கைமுக்கு சிறுகதையின் ஒரு வரி வெகு நேரம் என் மனதில்ஒலித்துக் கொண்டு இருந்தது அது இந்த வரிதான் “ஒரு அழுக்கில்லாத சட்டை இருந்திருந்தால் அவரிடம் (சுந்தர மசாமி)பேசியிருப்பேன். பேசியிருந்தால் இன்னொரு திசைக்கு போயிருப்பேன்” இது மிகவும் ஆழமான வரி என்பது உணரந்தவர்களுக்குத் தெரியும்.விரக்தி அடைந்த நிலையில் , அதேநேரத்தில் வாசிப்பின் சுவை அறிந்த ஒரு புத்திசாலி இளைஞனுக்கு , அதுவும் வறுமை சார்ந்த தாழ்வுணர்ச்சியில் இருப்பவனுக்கு, ஒரு பெரிய எழுத்தாளனிடம் பேச …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130980/

கைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்

  கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ கைமுக்கு என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தை நமக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் அக்னிப்பிரவேசம் என்ற வார்த்தை தோன்றியது.அதேபோன்ற ஒன்று நமக்கு நடந்தது உண்டா? ஒரு நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்தான் திருத்தக்கதேவரின் கதையைச் சொன்னார். திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியை எழுதியபோது அது சிற்றின்பக் காப்பியம் என்பதனால் இவர் சைன துறவிகளுக்குரிய நெறி தவறியவர் என்று அவதூறு கிளம்பியது. அக்கால வழக்கப்படி திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய செம்புப் பதுமையை ஆரத்தழுவி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130916/

ஆழி, கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ கைமுக்கு சிறுகதையை வாசித்தேன். சிறுகதை என்ற இலக்கணத்தை எளிதாகக் கடந்து செல்கிறது. ஆனால் பக்க அளவில் இதைவிட நீளமான சிக்கலான அமெரிக்கக் கதைகளையும் நான் படித்திருக்கிறேன். கைமுக்கு கதை அதன் அமைப்பில் பத்துலக்ஷம் காலடிகளுக்கு சமானமானது. ஆனால் அதைவிட ஓநாயின் மூக்கு முக்கியமான கதை என்பது என் எண்ணம். ஓநாயின் மூக்குக்குப் பிறகு இந்தக்கதை. ஒரு கதை எங்கே முடிகிறது என்பது எனக்கு முக்கியம். ஒரு earthly முடிவை அடையும் கதை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130880/

கைமுக்கு, ஆழி- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு கதையை வாசிக்கும்போது இந்த கதைவரிசையில் உள்ள கலவையான தன்மையை நினைத்துக்கொண்டேன். ஒருவகை கதைகள் மிகமிக ஒருமையான வடிவில், மையம் மிக நுட்பமான உணர்த்தும்வகையில் உள்ளன. உதாரணமான கதை ‘கலைவதும் பொலிவதும்’. இன்னொரு வகையான கதைகள் திட்டமிட்டே கதையின் ஒருமையை சிதைக்கின்றன. இந்த ஔசேப்பச்சன் கதைகள் அவ்வகையானவைதான். வடிவ ஒருமையை எப்படிச் சிதைக்கின்றன என்றால் ஒன்று ஔசேப்பச்சனும் மற்றவர்களும் அடிக்கும் கமெண்டுகள் வழியாக கதைக்குள் ஊடுருவிக் கலைக்கின்றன. இன்னொன்று ஒன்றுக்குமேற்பட்ட கதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130868/

கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] கைமுக்கு சடங்கை குறித்து எனக்கு தெரிந்தவை : அ) திருமணமான நம்பூதிரி பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி ஆணுக்கு தான் கைமுக்கு .ஸ்மார்த்த விசாரணையில் தன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் நம்பூதிரி கைமுக்குக்கு முன் வர வேண்டும் . ஆ) ஆணோ பெண்ணோ இதர வர்ணத்தார் எனில் கை முக்கு இல்லை இ) கைமுக்கு நடத்த அரசர் உத்தரவு வேண்டும் ஈ) சுசீந்திரம் கோவில் யோகக்காரர்கள் பொறுப்பு உ) …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130849/

கைமுக்கு [சிறுகதை]

குமரகம் அஸ்வதி கிளப்பில் அத்தனைபேரும் வந்தபிறகுதான் ஔசேப்பச்சன் வந்தான். வழக்கமாக அவன் முதலிலேயே வந்து அமர்ந்து அத்தனை குடிப்பொருட்களையும் எடுத்து பரப்பி வைத்துக்கொண்டு பொறுமையிழந்து அமர்ந்து வருபவர் ஒவ்வொருவரையாக கெட்டவார்த்தை சொல்வான். பொதுவாக ஔசேப்பச்சனின் கெட்டவார்த்தைகள் விசேஷமான அழகுடன் இருக்கும். உதாரணமாக கொந்தைக்குப் பிறந்தவனே என்றால் கத்தோலிக்க பாதிரியாரின் மைந்தன் என்று பொருள். கொந்தை என்றால் மரச்சிலுவை. நான் அதைப்பற்றிச் சொன்னபோது ஸ்ரீதரன் “என்னை அவன் ‘கைமுக்குக்குப் பிறந்தவனே’ என்றான். “திருவிந்தாங்கூர் நாயர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் வரி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130727/