Tag Archive: கூடு [சிறுகதை]

கூடு,பிறசண்டு- கடிதங்கள்

‘பிறசண்டு’ [சிறுகதை] அன்புள்ள ஜெ   பிறசண்டு கதை எங்கோ நிஜமாகவே நடந்ததாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் இதை நான் கண்டிருக்கிறேன். என் மாமாவீட்டில் திருட்டு போயிற்று. கேஸ் கோர்ட்டிலே நடந்தது. மாமா திருடனை கண்ணால் பார்த்த சாட்சி. மாமா சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தால் திருடன் ஓடுவதை கண்டிருக்கிறார். சின்னப்பையன்தான், இந்தக்கதையிலே வருவதுபோல   பிறகு போலீஸ் ஸ்டேஷனிலும் கோர்ட்டிலும் விசாரணை. அவர்கள் தொடர்ச்சியாக சந்தித்திருக்கிறார்கள். நடுவிலே இவருக்கு சுகரினால் மயக்கம் வந்தபோது அவன் டீ வாங்கி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131794/

கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி இல்லாமல் துறவுக்குப் போனதைப்பற்றியும் அதிலிருந்து மீண்டதைப்பற்றியும். புதுமைப்பித்தனின் சித்தி அப்படிப்பட்ட ஒரு கதை இரண்டாம் வகை கதைகள் துறவில் ஒரு சின்ன தவறு செய்தாலும் அனைத்துமே இல்லாமலாவதைப் பற்றி. டால்ஸ்டாயின் ஃபாதர் செர்கியஸ் அப்படிப்பட்ட கதை. மூன்றாம்வகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131977/

கூடு, பிறசண்டு – கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கூடு சிறுகதை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் வீடு புதுக்கோட்டை அருகே. அங்கே ஒரு கம்யூன் உண்டு. மெய்வழிசாலை என்று பெயர். என் தாத்தா அதனுடன் தொடர்புடையவர். அப்போது மெய்வழிச்சாலை ஆண்டவர் இருந்தார். அவர் எவர் என்பதே தெரியாது. பிறப்பால் முஸ்லீம். ஆனால் சித்தர். அவர் அதை உருவாக்கினார். அவர் காலகட்டத்தில் அது வளர்ந்து வளர்ந்து ஒரு பெரிய அமைப்பாக ஆகியது. பிறகு சுருங்கிச் சுருங்கி இன்றைக்கு கூடு நாவலில் வரும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131791/

கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்

சிவம் [சிறுகதை] கூடு [சிறுகதை] அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது, ஆர்வம் மிகுந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மூச்சில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எதை ஒன்றையுமே தொடங்கும் முன்னமே அடுத்த தேர்வை செய்து அதற்குள் நுழைவது, போன்ற பழக்கங்களால் மனமும் உடலும் சோர்ந்திருந்தது, அன்றாட செயல்பாடுகள் மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131590/

கூடு, தேவி- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ   கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான objectiveness உள்ளது. அது வேறு ஒரு அனுபவம். இதிலுள்ளது subjectiveness இது அந்தக்கதைக்குள் ஒரு கதாபாத்திரம் செய்யும் பயணம். ஆகவே அவருடைய மனநிலைக்கு ஏற்ப ஒருவகையான குறியீட்டு அர்த்தமும் உணர்ச்சிகளும் வந்துவிடுகிறது கதையில் அந்தக்கதாபாத்திரம் ஆன்மீகமாக பயனம் செய்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131497/

நற்றுணை ,கூடு- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ கூடு கதை வாழ்க்கையின் ஒரு வடிவம். அதை நான் ஆன்மிகமான விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. பல வாழ்க்கைகளே அப்படித்தான். என் தாத்தா தஞ்சையில் கட்டிய வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்தார்கள். மொத்தம் இருபத்திரண்டு அறைகள். கல்யாணமண்டபமாக இருபது ஆண்டுகள் இருந்தது. பாழடைந்து பத்தாண்டுகள் கிடந்தது. அவர் வக்கீலாக இருந்தார். அன்றைக்கு அத்தனை அறைகளிலும் ஆளிருந்தார்கள். எதிர்த்த வீட்டை வாங்கி கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வைத்திருந்தார். அவருடைய சைஸ் அந்த வீடு. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131488/

கரு,கூடு- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 அன்புள்ள ஜெ கரு ஒரு மனம்பேதலிக்கச் செய்யும் கதை. அந்தக்கதையின் உத்தி என்ன என்பதை அதை வாசித்து முடித்து யோசித்துப் பார்க்கையில் மிகமிகத் தெளிவாகவே உணரமுடிகிறது. மிக எர்த்லியாக ஆரம்பிக்கிறது கதை. இது கதையே அல்ல, கட்டுரை என்று பாவனை காட்டுகிறது. செய்திச்சுருக்கம் போல, கலைக்களஞ்சியப் பதிவுபோல நடிக்கிறது. அரசியலில் நிலைகொள்கிறது. அப்படியே விரிந்து சட்டென்று நிலக்காட்சிகளை விரிவாக சொல்லி அதற்குள் இழுக்கிறது. தனிப்பட்ட உணர்ச்சிகளை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131587/

கூடு,பலிக்கல்- கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேஷ் சென்றிருந்தபோது அங்கே மகரிஷி மகேஷ் யோகியின் பழைமையான ஆசிரமம்- கம்யூன் கைவிடப்பட்டு கிடப்பதை கண்டேன். இடிபாடுகள். குட்டிச்சுவர்கள். அவற்றிலிருந்த ஓவியங்கள் திகைப்பூட்டின. அற்புதமனா பல ஓவியங்கள் அழிந்து கிடந்தன அதைப்பற்றி விசாரித்தேன். மகேஷ் யோகி எழுபதுகளில் ரிஷிகேஷில் அந்த இண்டர்நாஷனல் கம்யூனை உருவாக்கினார். உலகம் முழுக்க இருந்து ஹிப்பிகளும் யோகம் பயில்பவர்களும் அங்கே வந்தார்கள். அது விரிந்துகொண்டே சென்றது. அங்கே இசைக்கலைஞர்கள் ஓவியர்கள் எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131484/

கூடு,சிவம்- கடிதங்கள்

சிவம் [சிறுகதை] அன்புள்ள ஜெ சிவம் ஒரு தத்துவார்த்தமான விளையாட்டை ஆடுகிறது. அன்பே சிவம் என்ற வார்த்தையின்மேல் அத்வைதியின் பகடியுடன் ஆரம்பிக்கிறது. அன்பை தூக்கி எவர் மண்டையிலும் போடலாம். தலைமுறைதலைமுறையாக பூசை அபிசேகம் செய்யப்பட்டு மழமழவென்று ஆனது. தேவை என்றால் மனிதன் அதன்மேல் ஏறிநின்று வேறு தெய்வத்தை தொழவும் தயங்கமாட்டான். அந்த  ‘சிவம்’ பற்றிய கதை இது. ஜலசமாதி ஆகும் அந்த சாமியாரும் அன்பை கங்கையில் இருந்து எடுத்து வைத்து பூசை செய்பவர். சிவோகம், அன்பே நான் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131444/

நற்றுணை, கூடு- கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஜெ நற்றுணை கதையைப் பற்றி பேசும்போது எனக்கு நினைவுக்கு வந்தது நீங்களே எழுதிய ஒரு கட்டுரை. அதை தேடிக்கண்டடைய முடியவில்லை. அது மணிமேகலை காவியத்தைப் பற்றியது. அதில் மணிமேகலை ஒரு தாசி என்பதனால் உதயகுமாரன் என்பவன் அவளை தூக்கி வரச்சொல்கிறான். அவனே தேடி வருகிறான். அவள் ஒரு பளிங்கு அறைக்குள் செறு ஒளிந்துகொள்கிறாள். அவளை தேடிவரும் உதயகுமாரன் அவளை கண்டுபிடிக்கமுடியாமல் செல்கிறான் அவள் வெளிவந்து தன் தோழியிடம் அழுகிறாள். நான் இத்தனை தவம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131367/

Older posts «