Tag Archive: காக்காய்ப்பொன் [சிறுகதை]

கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி இல்லாமல் துறவுக்குப் போனதைப்பற்றியும் அதிலிருந்து மீண்டதைப்பற்றியும். புதுமைப்பித்தனின் சித்தி அப்படிப்பட்ட ஒரு கதை இரண்டாம் வகை கதைகள் துறவில் ஒரு சின்ன தவறு செய்தாலும் அனைத்துமே இல்லாமலாவதைப் பற்றி. டால்ஸ்டாயின் ஃபாதர் செர்கியஸ் அப்படிப்பட்ட கதை. மூன்றாம்வகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131977/

நஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் [சிறுகதை] இனிய ஜெயம் நஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இனிமையை ஏந்தி இருக்கலாம். எது மறித்தது? அவளை மன்னிப்புக் கேட்க சொல்லி காலில் விழவைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவளுக்கு இந்த நிலையை அவன் அளிப்பது … இனிமையில் திளைப்பதை விடவும், நஞ்சு பெய்வது மேலும் இனிமை கொண்ட ஒன்றா? …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131296/

சுற்றுகள், காக்காய்ப்பொன்- கடிதங்கள்

சுற்றுகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வாசித்து வந்துகொண்டிருக்கிறேன். கதைகளை வாசித்தபின் கடிதங்களையும் வாசிப்பது என் வழக்கம். அவை வாசிப்பின் பலவகையான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இன்றுதான் சுற்றுகள் கதையை வாசித்தேன். அதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். ஒரு நீரோடையை வைத்து இந்தக்கதையை எழுதியிருக்கலாம். ஆனால் அதை நிறையபேர் எழுதியிருப்பார்கள். இப்படி ஒரு தொழிற்சூழலுக்குள் கதையை கொண்டுசென்று எழுத எது நமக்கு தடையாக இருக்கிறது? எலக்டிரானிக் பொருட்கள் கருவிகள் போன்றவை போதிய அளவுக்கு கவித்துவமானவை அல்ல …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131283/

நஞ்சு, காக்காய்ப்பொன் -கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் விதவிதமான கருக்கள், களங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வைகளும் மாறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கென வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைப்பார்வை என்ற ஒன்றில் கட்டுண்டது அல்ல எழுத்தாளனின் எழுத்து. அது அந்தந்த தருணங்களில் இயல்பாக வெளிப்படுவது என்று நீங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறீர்கள். நற்றுணை போன்ற ஒரு கதையை வாசித்தவருக்கு நஞ்சு கதை அதிர்ச்சியையேதரும். அது மானுட மனதிலே உள்ள அழியாத நஞ்சைப் பற்றிச் சொல்வது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131241/

நற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஆசிரியருக்கு, “இறைவன்” — நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமையில் விம்மச் செய்த கதை. மாணிக்கம் ஆசாரி சாக்குப்பையுடன் நுழைந்த போதே உள்ளுக்குள் ஏதோ விழித்துக் கொண்டது… ஒருவேளை இசக்கியம்மையை நடிக்கத் தொடங்கியிருந்தேன் எனலாம். தெற்குப்புரையின் திறந்த  பாதிக்கதவு வழி சிவந்த தூணாகிறது…மெல்லிய படிமமென தேவி எழுந்து விடுகிறாள் அங்கேயே…!! இசக்கியம்மை இழந்த வாழ்வு, அவளிழந்த பகவதி, அதனாலொரு குற்றவுணர்வு ஆழ்மனதில் நிறைக்க ஆசாரியைச் சுற்றி சுற்றி வருகிறாள்…!!  அறைக்குள் யாரோ இருக்கும் உணர்வினை அடைவது அவள்மட்டுமல்ல….!! வாயே திறக்காத கெத்தேல் சாகிப்பின் நினைவெழுகிறது…மாணிக்கத்தை எண்ணுகையில்….அன்னமும் ஒருவகை படைப்புதானே …படைப்புக்கிறைவர்கள் எழுந்தவண்ணமிருக்கின்றனர் தங்களில்…!! பிறந்த தொன்னூறு நாட்களில் என் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131180/

காக்காய்ப்பொன் [சிறுகதை]

“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார். விவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சரியாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130919/