Tag Archive: கரு [குறுநாவல்]

கரு,ராஜன்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ கரு குறுநாவலை இப்போதுதான் வாசித்து முடிக்க முடிந்தது. முதல் வாசிப்பில் அதன் தகவல்களும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களும், நிகழ்வுகள் தனித்தனிச் சரடுகளாகப் போவதும் நாவலை தொகுத்துக்கொள்ள முடியாமல் செய்தன. ஆனால் கதை நிகழும் களம் அற்புதமாக விவரிக்கப்பட்டிருந்தது. ஆகவே கதையில் யூனிட்டியும் இருந்தது முக்தா சொல்வதுபோல அகத்தேடலை புறத்தே நடத்திக்கொள்வது எளிது. ஏனென்றால் புறவுலகம் பருண்மையானது. ஆகவேதான் பயணம் செய்கிறார்கள். இவாஞ்சலிஸ்டுகளின் மதமாற்றப் பயணம் உண்மையில் ஒரு pilgrim’s progress தான் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131953/

முதுநாவல்,கரு- கடிதங்கள்

முதுநாவல்[சிறுகதை] அன்புள்ள ஜெ, தலைக்கெட்டு காதரும் இடும்பனும் போரிடும் காட்சியின் வர்ணிப்பை படித்தேன். அவர்கள் மோதிக்கொண்ட கணத்தில் அப்படியே கதையை ஃபோக் பாடலுக்குள் கொண்டுசென்று அவனுடைய கண்வழியாகச் சொல்ல ஆரம்பித்ததுதான் கிளாஸ். ஒரு படைப்பாளி இயல்பாக மூதாதையரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான். இங்கே என்னதான் சொன்னாலும் அதெல்லாம் யதார்த்தவாத எல்லைக்குள்தான் நிற்கும். அதில் மிகை இல்லாவிட்டால் அந்த கதைக்கு குறியீட்டு அர்த்தமே வராது. தரைவிட்டு கதை மேலே எழமலேயே போய்விடு அந்தக் கதையின் அமைப்பே அப்படித்தான் இருக்கிறது. மிகத்தெளிவான …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131872/

கரு, இணைவு- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 2 கரு [குறுநாவல்]- பகுதி 1 அன்புள்ள ஜெ கரு நாவல் இன்று மறைந்துபோய்விட்ட ஒரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. எண்பதுகளில் நான் மதுரை தியோசஃபிக்கல் நூலகத்தில் நிறைய வாசிப்பேன். நான் அப்போது பார்த்த பலநூறு புத்தகங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அந்தப்புத்தகங்கள் இன்றைக்கு அழிந்திருக்கலாம். அவையெல்லாமே தாந்திரீகம், யோகம், மறைச்சடங்குகள் ஆகியவற்றைச் சார்ந்தவை. அவை இன்றைக்கு பொருத்தமில்லாதவையாகக் கூட இருக்கின்றன. ஆனால் மர்மங்களையும் மறைக்கப்பட்ட ஞானத்தையும் தேடி அலைந்த மனிதர்களால் ஆன ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131724/

கரு- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 ஜெ, எளிதில் வாசித்துவிடக்கூடிய ஒரு கதை அல்ல கரு. அது அடிப்படையில் மெட்டஃபிசிக்கலான ஒரு படைப்பு. ஒரு தனிப்பட்ட ஆன்மிகக் கனவை வெளியே ஏதேனும் வழியில் சொல்லிவிடமுடியுமா என்ற முயற்சி. அதற்கு நீங்கள் இவ்வளவு அப்ஜெக்டிவான செய்திகளை ஏன் அளிக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன். ஒரே காரணம்தான் தட்டுப்பட்டது. இது சப்ஜெக்டிவானது. மிகமிக அந்தரங்கமானது. இதை நீங்கள் வெளியே சொன்னால் ஒரு அசட்டுக்கனவாகவோ வேடிக்கையாகவோ ஆகிவிடும். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131689/

கரு,கூடு- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 அன்புள்ள ஜெ கரு ஒரு மனம்பேதலிக்கச் செய்யும் கதை. அந்தக்கதையின் உத்தி என்ன என்பதை அதை வாசித்து முடித்து யோசித்துப் பார்க்கையில் மிகமிகத் தெளிவாகவே உணரமுடிகிறது. மிக எர்த்லியாக ஆரம்பிக்கிறது கதை. இது கதையே அல்ல, கட்டுரை என்று பாவனை காட்டுகிறது. செய்திச்சுருக்கம் போல, கலைக்களஞ்சியப் பதிவுபோல நடிக்கிறது. அரசியலில் நிலைகொள்கிறது. அப்படியே விரிந்து சட்டென்று நிலக்காட்சிகளை விரிவாக சொல்லி அதற்குள் இழுக்கிறது. தனிப்பட்ட உணர்ச்சிகளை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131587/

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 அன்புள்ள ஜெயமோகன், கரு மீண்டும் ஒரு அற்புதமான தாவல். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்ட ஓர் உலகம் என்பதனால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். இன்னொரு முறை வாசித்தபிறகுதான் முழுமையாகச் சொல்லமுடியும் என நினைக்கிறேன். முதலில் ஒரு குறிப்பிட்ட அறிவுலகை அறிமுகம் செய்கிறீர்கள். அதிலுள்ள மயக்கங்கள், குழப்பங்கள், கற்பனைகள் ஆகியவற்றுடன்.லாப்சங் ராம்பா போன்ற பாப்புலர் எழுத்தாளரை உருவாக்கியது அந்த கனவுலகம்தான்.அந்த கனவுலகுக்கும் இன்றைய திபெத்துக்குமான உறவையும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131581/

கரு [குறுநாவல்]- பகுதி 2

கரு [குறுநாவல்]- பகுதி 1 –  தொடர்ச்சி…. முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான். சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131519/

கரு [குறுநாவல்]- பகுதி 1

மழை நிலைக்காமல் வீசியறைந்து யூகலிப்டஸ் மரங்களை சுழற்றியடித்துக் கொண்டிருந்த இரவில், கண்ணாடிச் சன்னல்களுக்கு உள்ளே, குளிருக்கு கம்பிளிகளை போர்த்தியபடி அமர்ந்திருந்தபோது சுவாமி முக்தானந்தா சொன்னார். “நேற்று நான் டாக்டர் ரிதுபர்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் உடலில் அத்தனை நோய்களுக்கும் முதல்விதைகள் உள்ளன என்று. அவை உறங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது இன்னொன்றால் சமன்செய்யப்பட்டுள்ளன. அல்லது நம் உடலால் கட்டி வைக்கப்படுகின்றன. நோய் என்பது அதிலொன்று முளைப்பதே.” “நான் அவரிடம் கேட்டேன். ‘அப்படியென்றால் சாவும் அப்படி மனித உடலில் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131428/