Tag Archive: கணிகர்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–76

பகுதி ஏழு : நீர்புகுதல் – 5 யுதிஷ்டிரனுக்கும் சகுனிக்கும் இடையே நிகழ்ந்த அந்த நாற்களமாடலை சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் ஓயாது பாடிக்கொண்டிருந்தனர். நூறுநூறு முறை அதைப்பற்றிய வரிப்பாடல்களை, பழமொழிகளை, கவிதைகளை, பகடிகளை நான் கேட்டிருக்கிறேன். நாடகமாக, கூத்தாக, இளிவரல் நடிப்பென அதை சலிக்காது நிகழ்த்திக்கொண்டிருந்தனர். ஒவ்வொருமுறையும் அது புதிதாகத் தோன்றியது. அதன் முடிவில்லாத ஆழங்களில் மானுடருடன் ஊழ் ஆடும் விளையாட்டின் சில கரவுப்பாதைகள் இருந்தன. எந்த ஆட்டமும் மானுடனின் ஆணவத்தையும் திறனையும் ஒருபக்கமும் ஊழை மறுபக்கமும் நிறுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132271/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75

பகுதி ஏழு : நீர்புகுதல் – 4 கௌண்டின்யபுரியிலேயே நாற்களமாடல் நிகழலாம் என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. போருக்கு அழைக்கப்பட்டவருக்கே அதை நிகழ்த்துவதற்கான இடத்தை வகுக்கும் உரிமை. அதற்கான திட்டங்கள் மதுராவில் இருந்து விரிவாக ருக்மிக்கு அனுப்பப்பட்டன. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ருக்மியிடமிருந்து அந்த நிகழ்வை மதுராபுரியிலேயே வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தன் அணுக்கர்களுடனும் அகம்படியினருடனும் மதுராவுக்கு வந்து சேர்வதாகவும் செய்தி வந்தது. பலராமர் தன் ஆசிரியர் அகவை முதிர்ந்தவர் என்பதனால் அதுவே முறை என்று …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132175/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61

பகுதி ஆறு : படைப்புல் – 5 துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான படைசூழ்கை அமைக்கப்படவேண்டும். கருவூல வண்டிகளைச் சுற்றி நாம் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அவை நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது.” பிரஃபானு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். “இங்கே அரண்மனையிலேயே போதிய காவலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாம் காவற்படையை அமைத்துக்கொள்ள முடியும்” என்றார். “அவர்களில் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131442/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–50

பகுதி நான்கு : அலைமீள்கை – 33 தாளவொண்ணா உளத்தளர்வு எடையென்றே உடலால் உணரப்படுகிறது. அதை சுமக்க முடியாமல் இடைநாழியிலேயே நின்றேன். மறுபடி என்ன நிகழப்போகிறது? ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது. பேருருக்கொண்டு அது எழுந்து வருகிறது. அதை அஞ்சி வேறேதோ செய்துகொண்டிருக்கிறேன். அதை தடுப்பதற்கான சிறுசிறு முயற்சிகள். உருண்டுவரும் ஒரு பெரும்பாறைக்குக் கீழே சிறுசிறு பாறைகளை எடுத்துக்கொடுப்பதுபோல. அதனால் அதை தடுக்க இயலாது. அதன் எடையே அதன் ஆற்றல். அதன் ஊழ் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது. அது மிக …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131007/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48

பகுதி நான்கு : அலைமீள்கை – 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக! நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது? நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே!” …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130961/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–45

பகுதி நான்கு : அலைமீள்கை – 28 பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.” பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே!” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130878/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–44

பகுதி நான்கு : அலைமீள்கை – 27 மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை உள்ளத்தில் ஒருமுறை செய்து பார்ப்பது நன்று என்று பலமுறை கணிகர் என்னிடம் கூறியிருக்கிறார். ஒன்றை சொல்வதற்கு முன் ஒருமுறை அதை நாவால் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபோது “நான் அதை உள்ளத்தில் சொல்லிப்பார்ப்பதுண்டு” என்றேன். “அல்ல. உள்ளம் வேறு, நா …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130863/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–43

பகுதி நான்கு : அலைமீள்கை – 26 துவாரகைக்கு நான் தன்னந்தனியாகவே கிளம்பினேன். பிறரை அழைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எனது காவலர்களும் பயணத்துணைவர்களும் என் குடிலைச்சுற்றித்தான் தங்கியிருந்தனர். அவர்களை அழைத்திருக்க இயலும். ஆனால் அவர்களால் ஓசையின்றி கிளம்ப இயலாது. கவச உடைகளை அணிவது, காலணிகளை போட்டுக்கொள்வது, படைக்கலன்களை எடுத்துக்கொள்வது அனைத்தையுமே ஒருவகையான அலுவல் நடவடிக்கையாக அவர்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள். அதற்கான ஆணைகள் கூச்சல்கள் உடல்மொழிகள் அவர்களிடம் கூடிவிடும். வழக்கமான காவல்வீரர்களை மந்தணப்பயணத்திற்கு அழைத்துச்செல்லவே முடியாது. ஏனெனில் பெரும்பாலான படைவீரர்கள் பணி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130837/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39

பகுதி நான்கு : அலைமீள்கை – 22 ருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை சந்திப்பது இயலாதென்றும் தூதன் வந்து சொன்னான். என்ன செய்கிறது அவருக்கு என்று கேட்டேன். நேற்றைய விருந்தில் அவர் உண்டது ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. ஆகவே தன் குடிலில் உணவொழிந்து உப்பிட்ட நீர் மட்டும் அருந்தி படுத்திருக்கிறார் என்றான். மருத்துவர்கள்? என்றேன். மருத்துவர்களை அவர் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130776/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38

பகுதி நான்கு : அலைமீள்கை – 21 தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ ஒருவர் அந்த மெல்லிய படலத்தை கிழித்து எழுந்து அந்த மையத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவை குவியும். உச்சம்கொள்ளும். ஆர்ப்பரிக்கும். அழுது சிரித்து கொந்தளித்து எங்கோ வானிலென இருக்கும். அங்கிருப்போர் தேவரோ அசுரரோ என தெரிவர். பின்னர் மெல்ல மெல்ல அந்த …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130756/

Older posts «