Tag Archive: ஔசேப்பச்சன்

அறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை

சில விஷயங்கள் விந்தையானவை. புறவுலகத்திற்கு எந்த தர்க்க ஒழுங்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் அதற்கு காரணகாரிய உறவு ஒன்றை உருவாக்கிக் கொள்வோம். ஒன்றிலிருந்து ஒன்று என்று தொடரும் ஒரு நிகழ்வுச்சரடை. ஒன்றின் காரணமாக அதற்கு முன் இன்னொன்றை. ஆனால் இதெல்லாம் மிகச்சிறிய ஒரு அலகுக்குள்தான் சாத்தியம். ஒர் எல்லையை வகுத்துக்கொண்ட பிறகுதான் அதற்குள் உள்ள தகவல்களை நாம் சேகரிக்க முடியும். அவற்றை அடுக்கி அந்த காரணகாரிய உறவை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். ஒட்டுமொத்தப் பெரும்பரப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130956/

கைமுக்கு [சிறுகதை]

குமரகம் அஸ்வதி கிளப்பில் அத்தனைபேரும் வந்தபிறகுதான் ஔசேப்பச்சன் வந்தான். வழக்கமாக அவன் முதலிலேயே வந்து அமர்ந்து அத்தனை குடிப்பொருட்களையும் எடுத்து பரப்பி வைத்துக்கொண்டு பொறுமையிழந்து அமர்ந்து வருபவர் ஒவ்வொருவரையாக கெட்டவார்த்தை சொல்வான். பொதுவாக ஔசேப்பச்சனின் கெட்டவார்த்தைகள் விசேஷமான அழகுடன் இருக்கும். உதாரணமாக கொந்தைக்குப் பிறந்தவனே என்றால் கத்தோலிக்க பாதிரியாரின் மைந்தன் என்று பொருள். கொந்தை என்றால் மரச்சிலுவை. நான் அதைப்பற்றிச் சொன்னபோது ஸ்ரீதரன் “என்னை அவன் ‘கைமுக்குக்குப் பிறந்தவனே’ என்றான். “திருவிந்தாங்கூர் நாயர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் வரி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130727/

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

  திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் அந்திக்குமேல் மட்டுமே கூட்டமிருக்கும். நள்ளிரவில் நெரிசல். சினிமா விவாதத்திற்காக நான் அங்கேதான் தங்கியிருந்தேன். காலையில் அந்த இடமே ஓய்ந்துகிடக்கும். எந்த காட்டேஜிலும் ஆளிருப்பதாகத் தெரியாது. உள்ளேயே நீண்ட காலைநடை செல்லலாம். எதிரே எவருமே வரமாட்டார்கள். ஆனால் இரவில் செவிக்குள் மெழுகு இல்லாமல் ஏஸி காட்டேஜில்கூட தூங்கமுடியாது. “இரவெல்லாம் குடிக்கிறார்களே, இவர்கள் காலையில் வேலைவெட்டிக்கு போகமாட்டார்களா?”என்று கேட்டேன் விஸ்கிக் கோப்பையை டீபாயில் வைத்த ஔசேப்பச்சன் “இவர்கள் என்ன உன்னைப்போல அரைமலையாள அரைத்தமிழ் எழுத்தாளர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130551/

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130497/

வேரில் திகழ்வது [சிறுகதை]

பறம்பிக்குளம் காட்டுக்குள் அமைந்த காட்டுக்குடிலுக்கு முன்னால் மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். தாழ்வான மூங்கில் டீபாயில் ஜனிவாக்கர் பிளாக் லேபில், கொத்தி வறுத்த கோழிக்கறி, நிலக்கடலை,முந்திரிப்பருப்பு. நான் நிலக்கடலையை அள்ளித்தின்றபோது ஔசேப்பச்சன் “டேய் அந்த கப்பலண்டியை எடுத்து அப்பால் வை, குடிப்பவனுடன் குடிக்காதவன் வந்துசேர்ந்தால் இதுதான் வினையே. தொடுதீனிகளையெல்லாம் காலிசெய்துவிடுவார்கள்” என்றார். மெய்யாகவே ஸ்ரீதரன் அவற்றை எடுத்து அப்பால் வைத்தான். அவர்களின் பதற்றத்தைக் காண எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ பதுங்குகுழிகளில் போர்ச்சூழலில் ஒளிந்திருப்பதுபோல சாராயமும் தீனியும் போதிய …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130345/

வேட்டு [சிறுகதை]

எருமை மாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டு மணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130303/