Tag Archive: ஓநாயின் மூக்கு [சிறுகதை]

நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை நடிக்கிறது. நிழல்நாய் கடிக்காது, ஆனால் அதனுடன் விளையாடலாம். கலையில் உள்ள காமம் பகை எதையும் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது ஒருவகை நடிப்புதான். ஆனால் பொய் அல்ல. அன்பால் நீதியால் அப்படி மாற்றி நடிக்கப்படுகிறது அது. அதைத்தான் கதை சொல்கிறது. தத்துவ …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131550/

ஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ ஓநாயின் மூக்கு சமீபத்தில் மிகவும் தொந்தரவு செய்த கதை. அந்தக்கதை பற்றி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பேசிக்கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள பலவகையான சாபங்களின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அதாவது இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக நமது சமூகத்தில் இருந்துகொண்டிருந்தது எனக்கு எப்போதுமே உள்ள சந்தேகம் ஒன்று. மனநோயாளிகள் போன்றவர்களை வீட்டிலேயே வைத்துக்கொள்வதுபற்றி. அவர்களை dispassionate ஆக கையாள்பவர்கள்தான் பார்த்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கொஞ்சம்கொஞ்சமாக அவர்களைப் பார்த்துக்கொள்பவர்களும் அதேபோல …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130873/

வனவாசம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு விரிவான சிறுகதை. விரிவால் நாவல், அமைப்பால் சிறுகதை. வெவ்வேறு கோணங்களில் திறந்துகொண்டே செல்கிறது கதை. ஆனால் சூழ்ந்து வந்து முடிவது ஒரே புள்ளியில்.கதையின் நையாண்டிகள், ஔசேப்பச்சன் நாயர் சாதிபற்றிச் சொல்லும் பிலோ த பெல்ட் வசைகள் என கதை போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மெல்லமெல்ல அது தீவிரம் அடைகிறது. மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை தொட்டு மேலும் மேலும் ஆழத்திற்குச் செல்கிறது கொஞ்சநாட்களுக்கு முன் நாகர்கோயிலில் ஒரு நியூஸ் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130809/

மதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

மதுரம் [சிறுகதை] அன்புள்ள ஜெ மதுரம் கதையின் மையம் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது. ஒரு பிளைண்ட் ஸ்பாட் எல்லாருக்குமே இருக்கும். அதை எப்படி இனிமையாக்கிக் கொள்வது என்பதுதான் முக்கியமான கேள்வி அந்தக்கதையில் எருமை இனிமையை அடைவது மகன் வழியாக. ஆனால் மதுரம் கதை முழுக்க பரவியிருக்கிறது. ஆசான் மதுரம் தேடி பழைய காதலியை சென்று பார்க்கிறார். எருமைக்கு இருக்கும் மதுரத்தை விட கரடி நாயருக்கு இன்னும் மதுரம் இத்தனை இனிப்பு இருக்கு உலகில், குருட்டுத்தனம் நம்மை மறைக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130802/

ஓநாயின் மூக்கு, பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, பத்துலட்சம் காலடிகள் கதை உருவாக்கிய அலை சமீப காலத்தில் தமிழ் தீவிர இலக்கிய உலகில் நிகழாத ஒன்று. ஒரு கலைஞனை எதைக்கொண்டு மூடிவிடமுடியாது என்பதை வெறுப்பாளர்களுக்கு உணர்த்திய கதை அது. அடையாளங்களை போடுவது வெறுப்பைக் கக்குவது என்று செய்து செய்து ஒழித்துவிடலாம் என நினைப்பார்கள். கலை அதன்போக்கில் பீரிட்டு எழுந்து விடும். அதற்குமுன் வாசகன் திகைத்து பிறகு தலைவணங்கிவிடுவான். ஏனென்றால் அவன் என்னவாக இருந்தாலும் அடிப்படையில் கலையை ரசிப்பவன், இலக்கியத்தை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130797/

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

  திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் அந்திக்குமேல் மட்டுமே கூட்டமிருக்கும். நள்ளிரவில் நெரிசல். சினிமா விவாதத்திற்காக நான் அங்கேதான் தங்கியிருந்தேன். காலையில் அந்த இடமே ஓய்ந்துகிடக்கும். எந்த காட்டேஜிலும் ஆளிருப்பதாகத் தெரியாது. உள்ளேயே நீண்ட காலைநடை செல்லலாம். எதிரே எவருமே வரமாட்டார்கள். ஆனால் இரவில் செவிக்குள் மெழுகு இல்லாமல் ஏஸி காட்டேஜில்கூட தூங்கமுடியாது. “இரவெல்லாம் குடிக்கிறார்களே, இவர்கள் காலையில் வேலைவெட்டிக்கு போகமாட்டார்களா?”என்று கேட்டேன் விஸ்கிக் கோப்பையை டீபாயில் வைத்த ஔசேப்பச்சன் “இவர்கள் என்ன உன்னைப்போல அரைமலையாள அரைத்தமிழ் எழுத்தாளர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130551/