Tag Archive: இறைவன் [சிறுகதை]

நஞ்சு, இறைவன் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெ நஞ்சு சிறுகதை ஒரு கசப்பில் முடியும் கதை. நாம் நினைவில் நிறுத்தியிருப்பவை கசப்புகள்தான். ஆகவே நம் வாழ்க்கையை பெரும்பாலும் கசப்புகள்தான் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தான். கசப்புகளை வளர்த்துக்கொள்ளவும் புதிய அர்த்தங்களை அளிக்கவும் மனிதனுக்கு ஒரு இயல்பான மோகம் உள்ளது நஞ்சு கதையில் அந்தப்பெண் அவன் மனதில் பெண் என்று இருந்த இனிமையை இல்லாமலாக்கிவிட்டாள். அது பெரிய ஒர் இழப்பு. இது பலருக்கும் நிகழும். பலசமயம் மனைவியிடமிருந்தே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131482/

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன் தொடர்ச்சி தான் அடுத்த கதை என்று படுகிறது. ஆனால், முறை மட்டும் மாறிவிட்டது. சீட்டு முதல் பாகம், அதன் தொடர்ச்சி நஞ்சு. சீட்டு கதையின் நாயகன் அழகப்பன் சித்தரம் தெளிவாக காட்டப்படுகிறது. அவன் அம்மா, இப்போதாவது ஆணாக நடந்துகொள் என்று சொல்லும்போது, …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131352/

இறைவன், துளி- கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெ, திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு. இந்த எளிமையான அன்பை பார்க்கையில் ஒன்று தெரிந்தது. இது ஒருவகை விலங்குத்தனமான அன்பு. ஆகவே விலங்குகளில் இன்னும் கூர்மையாக அது வெளிப்படுகிறது. கருப்பன் அந்த அன்பின் ஓர் உச்சம். மனிதர்கள் எளிமையாக விலங்குபோல இருக்கையில் கொஞ்சம் முழுமையாக வெளிப்படுகிறது. செரிபெரல் ஆக …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131245/

இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

இறைவன் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை. வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ பற்றி ஒரே கேள்வியால் நெருக்கமாக இயல்பாக ஆவது. வரைய ஆரம்பித்தபின் சன்னதம் வந்து இன்னொருவராக ஆகிவிடுவது. வரைந்த பின் அவனிடம் வந்து மூடும் மூதேவி. ஒவ்வொன்றும் மகத்தான சித்திரமாக உள்ளது அந்த பாமரக்கிழவியின் பார்வையில் அந்த மகா …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131015/

இறைவன், பிடி- கடிதங்கள்

பிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம் கேட்டு அவருக்கு எழுதியிருந்தேன். சாதாரணமான சந்தேகம்தான். அவர் எனக்குப் பதில் சொன்னார். ஆனால் நீண்டநாட்களுக்கு பிறகு அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். என் கையைப்பிடித்துக்கொண்டு மீண்டும் விளக்கமாகச் சொன்னார். அவர் அவருடைய அந்த உயரத்தில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131013/

மலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்

மலைகளின் உரையாடல் [சிறுகதை] அன்புள்ள ஜெ மலைகளின் உரையாடல் கதையில் வரும் சில குறிப்புக்களை தேடிச்சென்று பார்த்தேன். உபநிடதத்தில் வரும் த தத்த தய தம ஆகிய சொற்களைப்பற்றிய குறிப்புகளை டி.எஸ்.எலியட் அவருடைய வேஸ்ட்லேன்ட் என்னும் கவிதையிலே குறிப்பிட்டிருக்கிறார். வேதங்களில் உள்ள சொல் அது, அதற்கு உபநிடதத்தில் விளக்கம்தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் இடியோசையின் குரல். வானிலிருந்து வேதம் இறங்குவது அப்படித்தான். அந்த குருவிக்கூட்டுக்குள் குருவிக்கான வேதம் குருவிக்கான மொழியில் இறங்கிக்கொண்டிருக்கிறது. அதை அந்தக் கருவி அடையாளம் கான்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130983/

இறைவன், மலைகளின் உரையாடல் – கடிதங்கள்

மலைகளின் உரையாடல்[சிறுகதை] அன்புள்ள ஜெ மலைகளின் உரையாடல் கதையை வாசித்தபின் நினைவுகள் வந்துகொண்டே இருந்தன. நான் 35 ஆண்டுகளுக்கு முன் தபால்துறையில் வேலைசெய்தேன். அன்றைக்கு தந்தி இருந்தது. கட்கடா மொழி. அதை படிக்கவே இரண்டு ஆண்டு ஆகிவிடும். எனக்கு என்னவோ அந்த சத்தம் பிடிக்காமல் ஆகிவிட்டது. என் தலையிலேயே அது கேட்பதுபோல ஆகிவிடும். உடம்பே தூக்கித்தூக்கி போடும். வாந்தியெல்லாம் வரும். ஆனால் ஒருநாள் அது ஒரு கிளியின் ஓசை போல தோன்றியது. தந்தியின் சத்தம் என நினைத்தது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130965/

இறைவன் [சிறுகதை]

வாசலில் தயங்கியபடி நின்றிருந்த ஒடுங்கிய, குள்ளமான, கரிய மனிதனை இசக்கியம்மைதான் முதலில் பார்த்தாள். யாரோ யாசகம் கேட்க வந்தவன் என்று நினைத்தாள். கூன்விழுந்த முதுகை நிமிர்ந்தி கண்கள்மேல் கையை வைத்து கூர்ந்து நோக்கி. “ஆரு? என்னவேணும்?” என்றாள் அவன் “நான் ஆசாரியாக்கும்” என்றான். “மாணிக்கம் ஆசாரீண்ணு சொல்லுங்க” ஆசாரியை எதற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று இசக்கியம்மைக்குப் புரியவில்லை. அதுவும் ஒரே ஒரு ஆசாரி. அவனால் ஒரு பலகையை தூக்கமுடியும் என்றுகூட தோன்றவில்லை. “எந்த வீடுண்ணு சொன்னாவ?” என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130588/