Tag Archive: ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன் தொடர்ச்சி தான் அடுத்த கதை என்று படுகிறது. ஆனால், முறை மட்டும் மாறிவிட்டது. சீட்டு முதல் பாகம், அதன் தொடர்ச்சி நஞ்சு. சீட்டு கதையின் நாயகன் அழகப்பன் சித்தரம் தெளிவாக காட்டப்படுகிறது. அவன் அம்மா, இப்போதாவது ஆணாக நடந்துகொள் என்று சொல்லும்போது, …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131352/

ஆயிரம் ஊற்றுக்கள், ஆடகம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   சூழ்ச்சிகள் நிறைந்த சூழலில் ஆள்வோருக்கு அவ்வப்போது ஓர் அலையென தனிமை வந்து தாக்குகிறது போலும். கைவிடப்பட்டிருக்கிறோமோ என்னும் ஐயம் எழுகிறது. அதற்கு மறுமொழி என நாங்கள் இணைந்து பின்குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.   இது வெண்முரசில் வந்த வரி. மிகமுன்னால் எங்கோ வந்தது. சும்மா குறித்து வைத்திருந்தேன். ஆனால் மோடியின் கைத்தட்டல் விளக்கேற்றல் சம்பவங்களில் இந்து ஞாபகம் வந்தது. வெண்முரசு தரும் அனுபவம் என்பது இதுதான். அரசியலில் மக்களின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130561/

இடம், ஆயிரம் ஊற்றுக்கள் -கடிதங்கள்

  ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஆயிரம் ஊற்றுக்கள் கதை அந்த தலைப்பிலேயே ஒரு பெரிய நெகிழவைக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஊற்றுக்களும் எங்கிருந்து எழுகின்றன? அந்த அன்னையின் மனசிலிருந்தா? அல்லது அவளால் பேணப்படும் அந்த மண்ணில் இருந்தா?   இயற்கையில் இந்த வன்முறை இருந்துகொண்டுதானே இருக்கிறது? ஒரு காட்டாளத்தியாக இருந்திருக்கலாம் என்று உமையம்மை ராணி சொல்லும்போது ஆண்டாள் காட்டில் மானை பிடித்து தின்னும் புலி உண்டு ராணி என்று பதில் சொல்கிறாள்   …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130562/

ஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஆயிரம் ஊற்றுக்கள் கதையின் கதைநாயகி உண்மையான வரலாற்றுக்கதாபாத்திரம் என அறிந்தேன். அந்தக்கதையை படிக்கையில் எனக்கு இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார். அவருடையது ஒரு சக்கரவர்த்தியின் வாழ்க்கை. ஆனால் மிகமிக துயரமானதும்கூட. அவர் தன் மகன் சஞ்சய் காந்தியின் இழப்பை எப்படி பார்த்திருபார் என்றும் எவ்வளவு இன்செக்யூர் ஆக உணர்ந்திருப்பார் என்றும் எண்ணமுடிகிறது.   பொதுவாக வரலாற்றில் இருக்கும் மனிதர்கள் மிகப்பெரிய எடையை தாங்குபவர்கள். அவர்களால் சராசரி மனிதர்களாக வாழ முடிவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130476/

ஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   ஆயிரம் ஊற்றுக்கள் கதையை வாசித்தபிறகு விக்கியில் போய் உமையம்மை ராணியின் கதையை வாசித்து தெரிந்துகொண்டேன். மனம் பாரமாகவே ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் பெரும்பாலும் நடந்தது. இதை ஒரு தொன்மம் என்று சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால் இக்காலத்தைய திருவிதாங்கூர் வரலாறு பெரும்பாலும் எழுதப்படவில்லை. ஆனால் இந்த களிப்பான்குளம் இன்றும் உள்ளது. ஓர் ஊராக இருக்கிறது.   மகாகவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் இந்த சம்பவத்தையும் உமையம்மை ராணியின் ஆளுமையையும் வைத்து …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130474/

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

  கொம்பொலி கேட்டதும் ஆண்டாள் வேலைக்காரி காளிக்கு கைகாட்டிவிட்டு அரண்மனையின் பூமுக வாசலுக்குச் சென்றாள். கரிய உடலும் பெரிய மீசையும்கொண்ட கொம்பூதி சரிகைத்தலைப்பாகை அணிந்து இடையில் செந்நிறக் கச்சை கட்டி குட்டியானையின் தும்பிக்கைபோன்ற கொம்பை தூக்கி ஊதியபடியே அரண்மனை வளாகத்திற்குள் வந்தான். அவனைத்தொடர்ந்து ஈட்டிகள் ஏந்திய எட்டு வீரர்கள் குச்சம் வைத்த தலைப்பாகைகளும் முகப்பு முடிச்சுகொண்ட கச்சைகளுமாக சீராக வந்தனர்.   திவான் ஆலெட்டி ரங்கய்யா  வருகை என்று தெரிந்து அரண்மனைக் காவலர்கள் தலைவணங்கி நின்றனர். ஈட்டி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130389/