Tag Archive: ஆகாயம் [சிறுகதை]

நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை மிகமோசம். உடம்புசரியில்லாத அம்மா, தம்பிகள். என் வேலைதான் ஆதாரம். அதை தெரிந்துகொண்டு ஒருவன் என்னை வற்புறுத்தினான். பலசிக்கல்களில் மாட்டவிட்டான். கடைசியில் நான் வளைந்துகொடுக்கவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். ஆனால் அதைவிட உலகம் தெரியவில்லை. தைரியம் இல்லை. நான் அவனுடைய சூழ்ச்சியால் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131966/

ஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்

ஆகாயம் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஆகாயம் கதையை வாசிக்கையில் எங்கே செல்கிறது கதை என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை பேசப்பட்ட பாணி கதையே அல்ல. ஆனால் இந்த தொடரில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கிரியேட்டிவிட்டி பற்றிய கதை. காதும் நாவும் இல்லாதவன் செய்த சிலை என்பதே குறியீடுதான். அவனால் அந்தக் கலையை விளக்க முடியாது- அந்தவகையில் பெரும்பாலான கலைஞர்கள் விளக்கத்தெரியாதவர்கள்தான். கலை நிகழ்ந்துவிடுகிறது. இனி அதை என்ன செய்வது? எப்படி பயன்படுத்துவது? சமூகத்திற்கு இதனால் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131964/

கரு,ராஜன்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ கரு குறுநாவலை இப்போதுதான் வாசித்து முடிக்க முடிந்தது. முதல் வாசிப்பில் அதன் தகவல்களும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களும், நிகழ்வுகள் தனித்தனிச் சரடுகளாகப் போவதும் நாவலை தொகுத்துக்கொள்ள முடியாமல் செய்தன. ஆனால் கதை நிகழும் களம் அற்புதமாக விவரிக்கப்பட்டிருந்தது. ஆகவே கதையில் யூனிட்டியும் இருந்தது முக்தா சொல்வதுபோல அகத்தேடலை புறத்தே நடத்திக்கொள்வது எளிது. ஏனென்றால் புறவுலகம் பருண்மையானது. ஆகவேதான் பயணம் செய்கிறார்கள். இவாஞ்சலிஸ்டுகளின் மதமாற்றப் பயணம் உண்மையில் ஒரு pilgrim’s progress தான் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131953/

ஆகாயம் [சிறுகதை]

கல்லுவேலை காரியக்காரர் செண்பகராமன் மாடன் பிள்ளை அவருடன் வந்த மிளகுமடிசீலை காரியக்காரர் மார்த்தாண்டன் நீலன் பிள்ளையுடன் கல்லாசாரிகள் வேலைசெய்துகொண்டிருந்த புறமுற்றத்தின் நடுவே நடந்தார். “பாத்து நடக்கணும்… தரை முழுக்க அம்புமுனை வாள்முனை மாதிரி கல்லுடைசல்கள் உண்டு… குத்தினா ரத்தக்கோரையாக்கும். தெய்வ சிற்பங்கள் உள்ள மண்ணு ஆனதினாலே மிதியடி போடக்கூடாது” என்றார் செண்பகராமன் மாடன் பிள்ளை “ஆமா, இரும்புத்துண்டு மாதிரில்லா மின்னுது” என்றார் மார்த்தாண்டன் நீலன் பிள்ளை. சிற்பிகள் கற்களின்மேல் தொற்றி அமர்ந்தும் அருகே மண்டியிட்டும் வேலைசெய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131938/