Daily Archive: May 8, 2020

போழ்வு [சிறுகதை]

கொல்லத்திலிருந்து நான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர ஒரு பகலும் ஓர் இரவும் ஆகியது. காயல் வழியாக கொச்சுவேளி வரை படகில் வந்தேன். மூங்கிற்பாயால் வளைவான கூரையிடப்பட்ட படகில் பகல் முழுக்க கரையோரமாக ஒழுகிச்சென்ற தென்னைமரக் கூட்டங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவை தொலைவிலிருந்து பார்த்தபோது புல்பத்தைகள் போல தோன்றின. கோடைகாலமாதலால் நீர் நீலத்தெளிவுடன் இருந்தது. அதில் அவ்வப்போது பச்சைத்தீவுகள் போல பாசிப்பரப்புகள் மிதந்து சென்றன. இங்கெல்லாம் படகில் பாய்கள் இல்லை. துடுப்பு போடுவதுமில்லை. நீண்ட மூங்கில்கழிகளால் அடிநிலத்தில் ஊன்றி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131030/

சித்திரைநிலவு- கடிதங்கள்

இனிய ஜெயம் இன்று சித்திரை முழு நிலவு நாள். பெரும்பாலும் இன்று அருணை மலையில் வ்ருபாக்ஷ குகையில் இருப்பேன். நிலவு பொழியும் அருணைக் கோவிலை, வரை குகை வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அதீத அனுபவம். ரமணரின் இருப்பை அப்போது நான் உணர்வதாக நினைத்துக் கொள்வேன்.  ரமணர் எந்த குகையில் அமர்ந்து எந்த நிலவை எந்தக் கோவிலை பார்த்துக்கொண்டிருந்தாரோ அதே நிலா அதே குகை அதே கோவில். ஆனால் நான் மட்டும் ரமணன் இல்லை. பார்ப்போம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131221/

நற்றுணை,லீலை -கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஜெ நற்றுணை கதையை கொஞ்சம் தாமதமாக வாசித்தேன். இந்தக்கதையை வாசித்தபோது இதற்குச் சமானமான ஒரு தொன்மம் நம் மரபில் எங்காவது இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்தக்கதை அப்படியே ஜோன் ஆஃப் ஆர்க் கதையின் பாணியில் அமைந்திருந்தது. ஜோன் தன்னுடைய 13 ஆவது வயதில் தேவதைகளை நேரில் காண ஆரம்பித்தாள்.படிப்பறிவில்லாத பிரெஞ்சு கிராமத்துப்பெண் பிரெஞ்சுப் படைகளுக்கு தலைமைவகித்து பலமுறை பிரிட்டிஷ் படைகளைத் தோற்கடித்தாள். ஒரு வீரத்தளபதியாக மாறினாள். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131186/

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல்[சிறுகதை] அன்புள்ள ஜெ மனசாட்சியை துளைக்கும் இன்னொரு கதை பலிக்கல். அது ஒரு தெளிவை அளிக்கவில்லை. தெளிவில்லாத ஒரு பெரிய சக்தியை அடையாளம் காட்டுகிறது. திட்டவட்டமான விதிகளின்படி இந்த பூமி செயல்படுகிறது என்று எவரும் சொல்லமாட்டார்கள். பாவபுண்ணிய விதிகள் எல்லாம் தராசுத்தட்டு மாதிரி துல்லியமானவை அல்ல. ஆனால் ஏதோ ஒன்று இல்லாமலும் இல்லை. இந்த மர்மம்தான் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது பாவபுண்னியத்தால் அல்ல நாம் அறியாத வேறொரு அலையால் இந்த வாழ்க்கை அலைக்கழிகிறது. இதில் நம்முடைய அன்றாடச் சின்ன …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131219/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–55

பகுதி ஐந்து : எரிசொல் – 1 தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி நலுங்கி அசைய மடியில் வேய்குழலுடன் கைகளை மார்பில் கட்டி இளம் புன்னகையுடன் விழி மூடி அமர்ந்திருந்த இளைய யாதவரின் முன் அமர்ந்து முதிய சூதன் தன் இரு விரலால் குறுமுழவை மீட்டி பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியத்தில் அகவை ஒலியில் பாடிக்கொண்டிருந்தான். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131216/