Monthly Archive: April 2020

செங்கோலின் கீழ்

என் விசைப்பலகை உச்சவேகத்தில் தட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கதை சூடான கட்டத்தில் செல்கிறது. அருகே ஒரு டிப் டிப் டிப் சத்தம். என்ன அது? மீண்டும் அதே சத்தம். நிறுத்திவிட்டு பார்த்தால் என்னுடைய பிரியத்திற்குரிய பல்லி. அதற்கு நான் இன்னும் பெயர் இடவில்லை. பெயர்களும் அடையாளங்களும் கொண்ட இந்த உலகுக்கு அதை கொண்டுவரவில்லை என்ன சத்தம் கொடுக்கிறது? வேறேதேனும் பல்லி அருகே நிற்கிறதா என்ன? இல்லை, இது ஒரு சண்டியர். இந்த வட்டாரத்தில் வேறுபல்லிக்கு இடமில்லை. மேலே ஒரு டியூப்லைட். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130913/

இறைவன் [சிறுகதை]

வாசலில் தயங்கியபடி நின்றிருந்த ஒடுங்கிய, குள்ளமான, கரிய மனிதனை இசக்கியம்மைதான் முதலில் பார்த்தாள். யாரோ யாசகம் கேட்க வந்தவன் என்று நினைத்தாள். கூன்விழுந்த முதுகை நிமிர்ந்தி கண்கள்மேல் கையை வைத்து கூர்ந்து நோக்கி. “ஆரு? என்னவேணும்?” என்றாள் அவன் “நான் ஆசாரியாக்கும்” என்றான். “மாணிக்கம் ஆசாரீண்ணு சொல்லுங்க” ஆசாரியை எதற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று இசக்கியம்மைக்குப் புரியவில்லை. அதுவும் ஒரே ஒரு ஆசாரி. அவனால் ஒரு பலகையை தூக்கமுடியும் என்றுகூட தோன்றவில்லை. “எந்த வீடுண்ணு சொன்னாவ?” என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130588/

ஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ ஓநாயின் மூக்கு சமீபத்தில் மிகவும் தொந்தரவு செய்த கதை. அந்தக்கதை பற்றி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பேசிக்கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள பலவகையான சாபங்களின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அதாவது இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக நமது சமூகத்தில் இருந்துகொண்டிருந்தது எனக்கு எப்போதுமே உள்ள சந்தேகம் ஒன்று. மனநோயாளிகள் போன்றவர்களை வீட்டிலேயே வைத்துக்கொள்வதுபற்றி. அவர்களை dispassionate ஆக கையாள்பவர்கள்தான் பார்த்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கொஞ்சம்கொஞ்சமாக அவர்களைப் பார்த்துக்கொள்பவர்களும் அதேபோல …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130873/

கைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்

  கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ கைமுக்கு என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தை நமக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் அக்னிப்பிரவேசம் என்ற வார்த்தை தோன்றியது.அதேபோன்ற ஒன்று நமக்கு நடந்தது உண்டா? ஒரு நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்தான் திருத்தக்கதேவரின் கதையைச் சொன்னார். திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியை எழுதியபோது அது சிற்றின்பக் காப்பியம் என்பதனால் இவர் சைன துறவிகளுக்குரிய நெறி தவறியவர் என்று அவதூறு கிளம்பியது. அக்கால வழக்கப்படி திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய செம்புப் பதுமையை ஆரத்தழுவி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130916/

மதுரம்,பிடி -கடிதங்கள்

பிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதை ஒரு கள்ளமில்லாத கலைஞனின் சித்திரம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அதையே தொடர்ந்து சென்று அந்த கடைசிவரியில் “எனக்கா?”என்று ஊனமுற்ற கிழவர் கேட்கும்போது கதை வேறு ஒரு முழுமையை அடைவதை உணர்ந்தேன். மீண்டும் கதையை வாசித்தேன். கதையின் மைய வரியே ‘நன்னு பாலிம்ப’ தான் .அது பலமுறை வருகிறது. தியாகையரைப் பார்க்க ராமனே நடந்துவந்தான். தெய்வம் பக்தரை அறியும், தேடிவரும். அடுத்த வரி ‘நீர் அனுமார்’ என்பது. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130924/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–47

பகுதி நான்கு : அலைமீள்கை – 30 பிரத்யும்னனின் இளையவர்கள் அமர்ந்திருந்த சிற்றறை நோக்கி நான் ஓடினேன். அதன் வாயிலிலேயே என்னை கைநீட்டி தடுத்தபடி காவலர்கள் வந்தனர். “நான் உடன்பிறந்தாரை சந்திக்கவேண்டும், உடனடியாக இப்போதே” என்றேன். “அவர்கள் சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது எவரையும் சந்திப்பதில்லை” என்று காவலர்தலைவன் சொன்னான். “சந்தித்தாகவேண்டும். உடனே இப்போதே” என்று நான் மீண்டும் கூறினேன். ”இத்தருணத்திலேயே சந்தித்தாகவேண்டும்” என்று கூவினேன். “இது துவாரகையை ஆளும் மூத்தவர் ஃபானுவின் ஆணை. மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள்.” இன்னொரு அகவை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130934/

சென்றகாலத்தின் ஆற்றல்

சில பாடல்களை நான் நெடுநாட்களாகக் கேட்பதே இல்லை. அவை சிறுவயதுடன் தொடர்புடையவை.. சமீபத்தில் ஒரு கதையில் மூழ்கியபோது அந்தக்காலகட்டத்தின் மனநிலைக்காக சில பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். நேரடியாக இளமைநினைவுகளுக்கே சென்றுவிட்டேன். பாடல்கள் ஒரு காலகட்டத்தை முழுமையாக நினைவுக்குக் கொண்டுவருகின்றன. முகங்கள், இடங்கள், தருணங்கள். என் தோழர்களிலேயே சிலர் இப்போது உயிருடன் இல்லை. இளமையில் இருந்த இடங்கள் முழுக்கவே மாறிவிட்டன. தென்குமரிமாவட்டத்தின் நிலக்காட்சியில் ஒரு பெரிய மாற்றம் எழுபதுகளில் வந்தது. முன்பு மலைகளில் மட்டும் இருந்த ரப்பர் பயிர் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130910/

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

நான் டிஜிஎம் ஆபீஸ் முன்னால் காத்து நின்றிருந்தபோது பியூன் சண்முகம் என்னை கடந்துசென்றான். “என்ன சார், மறுபடியுமா? சொம்மா சின்னச்சின்னதா என்னுமோ பண்ணினு வர்ரதுக்கு எவனையாவது மண்டையிலே போடவேண்டியதுதானே?” என்றான். நின்று சுற்றிலும் பார்த்து “டிஜிஎம் மண்டையிலேயே போட்ரு… அந்தாள் மேஜைமேலே ஒரு பெரிய பேப்பர் வெயிட் இருக்கு பாத்தியா… எடுத்து போட்டிரு” என்றான். “போடா” என்றேன். “என்னா கேஸு?” “நீ உன் வேலையப்பாரு” “மறுபடி எதுனா பண்ணுவேன்னு போனவாரம் நீ போறப்பவே நெனைச்சேன்… நீ கில்லாடி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130637/

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.. உங்களது தற்போதைய சிறுகதைகள் இதுவரை தொடாத புதிய இடங்கள் சிலவற்றை தொடுகின்றன இந்த கதைகளை ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்களாக வாசித்தால் சில புதிய வாசல்கள் திறக்கின்றன எந்த முன்முடிவுகளும் இல்லாமல் தனியாக ஒரு தனிப்பட்ட கதையாக படிப்பதிலும் ஒரு வசதி இருக்கிறது இவற்றில் எதை நல்ல வாசிப்பாக நினைக்கிறீர்கள் அன்புடன் பிச்சைக்காரன்   *** அன்புள்ள பிச்சைக்காரன், உலக இலக்கியத்தில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புலகில் இந்த தொடர்ச்சி உண்டு. தனித்தனியான கதைகளாக அவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130917/

வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெ, பி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா? ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில் அமைந்த கதைகள் என்ற பொது அம்சம் உண்டு. ஆனால் ஒரே தொழிலுக்குள் அமைந்த கதைகள் இல்லை. வணிக எழுத்தில் ஆர்தர் ஹெய்லி மாதிரி தமிழில் பி.வி.ஆர் அந்தக்காலத்தில் நீதிமன்றம் ஆஸ்பத்திரி எல்லாம் பின்னணியாக வைத்து கதைகளை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130872/

Older posts «