Category Archive: இசை

சென்றகாலத்தின் ஆற்றல்

சில பாடல்களை நான் நெடுநாட்களாகக் கேட்பதே இல்லை. அவை சிறுவயதுடன் தொடர்புடையவை.. சமீபத்தில் ஒரு கதையில் மூழ்கியபோது அந்தக்காலகட்டத்தின் மனநிலைக்காக சில பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். நேரடியாக இளமைநினைவுகளுக்கே சென்றுவிட்டேன். பாடல்கள் ஒரு காலகட்டத்தை முழுமையாக நினைவுக்குக் கொண்டுவருகின்றன. முகங்கள், இடங்கள், தருணங்கள். என் தோழர்களிலேயே சிலர் இப்போது உயிருடன் இல்லை. இளமையில் இருந்த இடங்கள் முழுக்கவே மாறிவிட்டன. தென்குமரிமாவட்டத்தின் நிலக்காட்சியில் ஒரு பெரிய மாற்றம் எழுபதுகளில் வந்தது. முன்பு மலைகளில் மட்டும் இருந்த ரப்பர் பயிர் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130910/

சங்கத்தமிழிசை

  வழக்கமான பக்திப் பாடல்களின் மோஸ்தரை சங்கப் பாடல்களின் மீது போர்த்தவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான வரிகள் சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையவில்லை என்பதுடன் ஒவ்வொரு வரியும் சொல்லும் அவை உத்தேசிக்கப்பட்ட காட்சியையும் உணர்வெழுச்சியையும் அர்த்தச் செறிவுடன் இயல்பாக முன்வைக்கின்றன. பாடல்களையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் சிதைக்காமல் பாடலுக்குள் பொதிந்துள்ள உன்னதத்தை மேலேற்றும்படி அமைந்துள்ள இசை குறிப்பிடத்தக்கது.   மனித குலத்தின் புராதனமான பாடல்கள் – வேணு தயாநிதி

Permanent link to this article: https://do.jeyamohan.in/129960/

ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்

யாதும் ஊரே திருச்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், அவரது தங்கையை கும்பகோணத்துக்காரருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, அவர்களது திருமணம் முடிந்த ஒரு மாதம் கழிந்து, தம்பதிகளின் புதுக்குடித்தனத்தை பார்வையிட்டு வரச் சென்றிருந்தார். அவர் சென்ற சமயம் மாப்பிள்ளை இல்லை. தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தார். வெளியில் ரோட்டில் கார்களும், பைக்குகளும், ஸ்கூட்டர்களும் போகும் சத்தம். ஒலிப்பான்களின் ஓசை. பேச்சின் இடையில் அவரது தங்கை, “அண்ணா, அவர் வந்துட்டார்” என்று வாசலுக்கு சென்றுள்ளார். ரோட்டில் ஆயிரம் ஸ்கூட்டர்கள் சென்றிருக்கும், தனது தங்கை குறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/129868/

சுரங்கப்பாதைக்கு அப்பால்…

  ஒரு கவிஞனை நினைத்துக்கொள்வது   நள்ளிரவில் தனிமையில் தொடர்பே அற்ற ஓரு பாடலினூடாக மறைந்துபோன கவிஞன் ஒருவனை நினைத்துக்கொள்கிறேன் இந்த இசையில் அவன் எப்படி வந்தான்? இது நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்த இன்னொரு இசைக்கலைஞனின் குரல்   அவன் ஒரு நீண்ட குகைக்கு அப்பால் இருந்து  அல்லது முகில்திரைக்கு அப்பால் இருந்து  பாடிக்கொண்டிருக்கிறான் அவன் குரலில்  மது கலந்திருக்கிறது அவ்வப்போது உடைந்து அவ்வப்போது பிசிறடைந்து அவ்வப்போது உயிர்வீச்சு பெற்று சுழன்றுகொண்டிருக்கிறது. அவனும்  பித்துகொண்டவன் துயரம் நிறைந்தவன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/129714/

யேசுதாஸின் அப்பா

சமீபத்தில் மலையாள எழுத்தாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன். “அது ஏன் என்று தெரியவில்லை. ஐம்பது வயது தாண்டியபின் யேசுதாஸின் குரலைக் கேட்காமல் நான் ஒருநாள்கூட தூங்கமுடிவதில்லை…ஒருசில வரிகளாவது” . கூடியிருந்த அத்தனைபேரும் சொன்னார்கள். “அது அப்படித்தானே? தாஸேட்டனைக் கேட்காமல் எப்படி ஒருநாள் முடியும்?”. அத்தனைபேரும், அத்தனை இளைஞர்களும் அதைச் சொன்னார்கள்.   ஏசுதாஸுக்கு கேரளத்தில் உள்ள இடமென்ன என்று என்னிடம் ஒருமுறை ஒரு நண்பர் கேட்டார். “இளையராஜாவுக்கு தமிழில் இருந்திருக்கவேண்டிய இடம்” என்று நான் பதில் சொன்னேன். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/129477/

குடைக்கீழே…

  பழைய மலையாளப் பாடல்களுடன் ஏதோ ஒரு நினைவு இணைந்திருக்கிறது. இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டது முன்பு ஒரு முறை லட்சத்தீவுக்கு படகில் செல்லும்போது. ஆனால் அப்போது இது என் இளமைக்காலத்தைய நினைவாகப் பதிந்துவிட்டிருந்த ராமகிருஷ்ணன் ஆசாரியுடன் இணைந்திருந்தது. அவருக்கு பிடித்தமான பாடல். சுருள்முடி நெற்றியில் தொங்கி அசைய, மரத்தை இழைத்தபடி இதைப் பாடுவார்.  “கேட்டோ கொச்சே, இந்தப் பாட்டை நம்ம பெண்ணு சேர்ந்து பாடுவா”   அழகன், பாடகன், மிகமிக மென்மையானவன். கனவுகளிலேயே வாழ்ந்தவன். இந்த …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/129460/

கவிதைகள் பறக்கும்போது…

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம் மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி… மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் கவிதைகளை ஒலிவடிவமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவை ஒலிவடிவில் மேலும் அழகுகொள்பவை.உரைநடையில் சற்று கீழிறங்குபவை. அப்போதுதான் ஜோதிபாய் பரியாடத்து என்னும் கவிஞரின் வலைத்தளத்தைச் சென்றடைந்தேன்.   1965 ல் பிறந்த ஜோதிபாய் பேசாமடந்தை, கொடிச்சி, ஆத்மகதாக்யானம் போன்ற கவிதைநூல்களை எழுதியவர். பாலக்காட்டுக்காரர் ஆகையால் தமிழ் தெரிந்திருக்கிறது. மயிலம்மாள். போராட்டமே வாழ்க்கை என்னும் நூலை தமிழில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/128028/

நினைவுகளின் இனிய நஞ்சு

  சிலநினைவுகள் பழைய காலத்திலிருந்து எழுந்து வருவதற்கு சினிமாப்பாடல்களைப்போல உதவுபவை வேறில்லை. ஆராதனா என் பழைய திருவனந்தபுரம் நினைவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அன்று திருவனந்தபுரம் நியூ திரையரங்கில் நூறுநாட்கள் ஓடியபடம். பாட்டுக்காகவே ஓடியது என்பது ஒரு மரியாதைக்கூற்று. ஷர்மிளா டாகூர் என்னும் பேரழகிக்காக ஓடியது என்பது மேலும் கொஞ்சம் உண்மை. அவருடைய ஒற்றைத் தெற்றுப்பல்லுக்காக ஓடியது என்று சொன்னால் அதுவே கடவுளுக்குச் சம்மதமான உண்மையாக இருக்க முடியும் அன்றைய திருவனந்தபுரம் பெரும்பாலும் ஓட்டுக்கட்டிடங்களால் ஆனது. தாழ்வானகூரை கொண்டவை. மேலே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/127454/

கூடல்நாதனின் தாலாட்டு

சபரிமலையில் இரவில் ஐயப்பனுக்கு பூசை முடிந்து நடைசாத்துவதற்கு முன்னர் பாடப்படும் புகழ்பெற்ற பாடல் “ஹரிவாராசனம் விஸ்வமோகனம்“. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த சுவாமி அய்யப்பன் என்னும் படத்திற்காக இதற்கு மத்யமாவதி ராகத்தில் ஜி.தேவராஜன் இசை அமைத்தார். யேசுதாஸ் பாடினார். அதற்கு முன்னரும் பல இசைவடிவங்கள் இதற்கு இருந்தாலும் அன்றுமுதல் இப்பாடலே சபரிமலையில் பாடப்படுகிறது. இன்றும் கேரளத்தில் முதன்மையாக கேட்கப்படும் சில பாடல்களில் ஒன்று. இந்தப்பாடலின் ஆசிரியர் யார் என்று ஒரு விவாதம் ஐம்பதாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பாடலின் மூலவடிவம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/126857/

நீ மதுபகரூ…

சினிமாப்பாடல்களில் வரிகளின் இடம் என்ன? வரிகள் வழியாகவே இசை நினைவில் நின்றிருக்கிறது,எனக்கு. வரிகள் நன்றாக இல்லை என்றால் இசை உவகையூட்டுவதில்லை. தமிழின் பல மகத்தான பாடல்களை நான் கேட்பதே இல்லை. கீழ்மைநிறைந்த வரிகளால்தான். நல்ல வரிகள் அமைந்தால்கூட கேட்கக்கேட்க கொஞ்சம் சலிப்பூட்டுகின்றன அவை. ஓர் இடைவெளிக்குப்பின் அவற்றை கேட்டால் மட்டுமே வரிகள் புத்துயிர்கொள்கின்றன. ஆகவேதான் தெரியாத மொழிப்பாடல்களை மேலும் நுட்பமாக கேட்கமுடிகிறது. பாடல்களின் வரிகளில் பொருள்முழுமை பெறாத குழந்தைத்தனம் இருக்கவேண்டும். அல்லது எண்ணி முடிவடையாத ஒரு மர்மம் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/126790/

Older posts «