Category Archive: செய்திகள்

அறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை

சில விஷயங்கள் விந்தையானவை. புறவுலகத்திற்கு எந்த தர்க்க ஒழுங்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் அதற்கு காரணகாரிய உறவு ஒன்றை உருவாக்கிக் கொள்வோம். ஒன்றிலிருந்து ஒன்று என்று தொடரும் ஒரு நிகழ்வுச்சரடை. ஒன்றின் காரணமாக அதற்கு முன் இன்னொன்றை. ஆனால் இதெல்லாம் மிகச்சிறிய ஒரு அலகுக்குள்தான் சாத்தியம். ஒர் எல்லையை வகுத்துக்கொண்ட பிறகுதான் அதற்குள் உள்ள தகவல்களை நாம் சேகரிக்க முடியும். அவற்றை அடுக்கி அந்த காரணகாரிய உறவை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். ஒட்டுமொத்தப் பெரும்பரப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130956/

முற்றழிக!

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு   சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/126267/

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

  மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம். என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான்  சமர்ப்பணம் செய்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/578/

இலக்கியமும் நவீன இலக்கியமும்

  தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், ‘நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத தமிழ்ப்பண்பாட்டுத் தகவல்கள் உறைந்துள்ளன’ நான் அதைப்பற்றி மேலும் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பொருளை மதச்சடங்குக்கும், கோயில்வழிபாட்டுக்கும் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது எவ்வளவு முக்கியமான தகவல்! உதாரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16 வகையான வாழைப்பழங்கள் பயிராகின்றன. ஆனால் ஒரே ஒரு பழத்தை மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/8114/

பத்து சட்டைகள்

அன்புள்ள நண்பர்களுக்கு, சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும். அந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீண்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/5896/

விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

சங்கப்பாடல் ஒன்றில் ஓர் இடம் வருகிறது. மள்ளர்களின் வயலில் இருந்து வைக்கோல்கூளம் பறந்துசென்று உமணர்களின் உப்புவயலில் விழுகிறது. அதன்மூலம் அவர்களுக்கிடையே பூசல் உருவாகிறது. இந்த வரி சாதாரணமாக அக்காலகட்டத்து சூழல் வருணனையாக சொல்லப்பட்டு கவிதை பிறவிஷயங்களுக்குச் செல்கிறது.   இந்த சங்கக் கவிதையைப் பற்றி பேச வரும் வேதசகாயகுமார் இந்த ஒரு நிகழ்ச்சியை கூர்ந்த கவனத்துடன் ஆராய்கிறார். அக்காலத்து சமூக மோதல் ஒன்றின் சித்திரம் இதில் உள்ளது. உமணர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் அதிகமாக வருகின்றன. உப்பு …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/4244/

தமிழ் மின்னிதழ்

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான் இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ்.தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம் ஏற்கனவே வெளிவந்த சில இணையஇதழ்கள் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது என நினைக்கிறேன் பதாகை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/69786/

விழா 3 செய்திகள்

வெண்முரசு அறிமுக விழா குறித்த நாளிதழ் செய்திகள் தமிழ் இந்து நாளிதழ் மாலைமலர் நாளிதழ் வெண்முரசு அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://do.jeyamohan.in/65624/

அம்பையின் ஊடக தந்திரம்

அம்பை தி இண்டு தமிழில் எழுதிய இந்தக்கட்டுரை பெண்எழுத்தாளர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கான ஆதாரம். முதலில் இக்கட்டுரை என்னைப்பற்றி பேசத்தொடங்குகிறது. என் படத்தைப் போட்டு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் நான் பெண் எழுத்துப்பற்றி என்ன சொன்னேன் என அக்கட்டுரை பொருட்படுத்தவே இல்லை. நான் முதன்மையான பெண் எழுத்தாளர்களை புகழ்ந்து, விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களை முன்வைத்து அந்தத் தரத்தில் எழுதும் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் எதுவுமே எழுதாமல் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/56832/

விழா பதிவுகள்

இதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில், மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள் இப்படிக்கு இளங்கோ பதிவு படங்கள் டோக்கியோ செந்தில்

Permanent link to this article: https://do.jeyamohan.in/43686/

Older posts «