Category Archive: கடிதம்

வில்வண்டி- கடிதங்கள்

வில்லுவண்டி[ சிறுகதை] தனா அன்புள்ள ஜெ, தனா எழுதிய கதையை முன்பே படித்திருந்தேன். என்னுடைய ஊரைச் சேர்ந்த கதை. ஓரளவு கள்ளிக்காட்டு இதிகாசத்தை நினைவுபடுத்தும் கதைச்சூழல். நல்லகதை. இதை வாசிக்கும்போதுதான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன என்று தெரிகிறது. ஆசிரியரே உணர்ச்சிவசப்பட்டு கதைசொல்வதுபோன்ற அந்த மொழி கதைமுழுக்க ஆசிரியரே இருப்பதுபோல தோன்றவைக்கிறது. இந்தக்கதையில் அந்த அம்சம் இல்லை. ஆசிரியர் ஒரு குரலாக எங்கேயும் இல்லை. இந்தவகையான கதைகள் எந்த அளவுக்கு உணர்ச்சியில்லாமல் சொல்லப்படுகின்றதோ அந்த அளவுக்கு நல்லது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132345/

இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக வாசகர்களில் பதிந்திருக்கும் என நினைக்கிறேன் கெ.எஸ்.ராஜன் *** அன்புள்ள ஜெயமோகன், ‘இசுமியின் நறுமணம்’ சிறுகதை வாசித்தேன். ஒரு கொண்டாட்ட மனநிலையில் தொடங்கி உணர்வுபூர்வமாக முடியும் கதை. காலையில் இயந்திரத்தனமாக வேலைசெய்து, இரவில் குடியும் கொண்டாட்டமுமாக இருக்கும் ஜப்பானியர்களின் ஆழ்மன …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132276/

உதிரம்- கடிதங்கள்

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ அனோஜனின் கதையான உதிரம் வாசித்தேன். எனக்கு பலவகையான சம்பந்தமில்லாத நினைவுகள் வந்தன கோர்வையாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. என் வயதில் இந்தக்கதை என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை. இது ஒரு ஆய்வுப்பொருள் என்றுதான் எனக்கு தோன்றியது. ஆனால் இளைஞர்களுக்கு அப்படி இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் உண்மையான சிக்கலை கூர்மையாக சொன்ன ஒரு கதையாக இருந்திருக்கலாம். அந்தவகையில் அழகான கதை என்றுகூட சொல்லுவேன்.ஆகவே இதைப்பற்றி எழுதுகிறேன் என்னுடைய கேள்வி என்பது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132327/

கவி- கடிதங்கள்

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி அன்புள்ள ஜெ இந்த புதியவரிசைக் கதைகள் நன்றாக இருக்கின்றன. இந்த மனநிலைக்கு நிறையவே கதைகள் தேவையாகின்றன. எம்.கே.மணியின் கவி மெல்லிய பகடி கொண்ட கதை. அதில் அநீதியும் கீழ்மையும் வென்று நின்றிருக்கும் ஒரு காலகட்டத்தைப்பற்றிய விரைவான கோட்டுச்சித்திரம் தரப்படுகிறது. அவர்கள் ஜெயித்துக்கொண்டே போகிறார்க்ள். எதைப்பற்றியுமே கவலைப்படுவதில்லை இங்கே  ‘கண்ணதாசனைப்போன்ற’ கவிஞன் குடித்துச் சீரழிந்து சோற்றுக்கில்லாமல் அலைந்து கஷ்டப்படுகிறான். அவன் இவர்களை ‘பாடி’ வாழவேண்டும். அந்தக்கால bard எல்லாம் வீரர்களையும் சான்றோர்களையும் பாடினார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132262/

புதியகதைகள்- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் அழகான கதை. மென்மையானது. சொல்லப்போனால் வண்ணதாசனின் உலகைச் சேர்ந்தது. ஆனால் அந்த குடிப்பேச்சுக்களை அவர் எழுதியிருக்க மாட்டார். அந்த காண்ட்ராஸ்ட்தான் இந்தக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது. இந்த மாதிரி ஒரு சூழலிலும் அந்த சின்ன நுட்பமான விஷயத்துக்கு இடமிருப்பது அளிக்கும் மகிழ்ச்சிதான் அந்தக்கதை என நினைக்கிறேன் ஒருமுறை நானும் நண்பர்களும் செங்கோட்டைப் பக்கம் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தபோது மந்தாரமலரின் வாசனை. அது மிகமிக மென்மையான வாசனை இல்லையா? …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132324/

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

  மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல் அன்புள்ள ஜெ வினவு தளம் பற்றி எழுதியிருந்தீர்கள். என் பெயர் வேண்டாம். இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளுங்கள். நான் மீண்டும் இதைப்படிக்கும் மனநிலையில் இல்லை. இந்த இடதுசாரிக் குழுக்களின் உண்மையான அரசியல் என்ன? நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களிடமிருந்து விடுதலைபெற்று வெளியே வந்தவன். அதன் அன்றுமுதல் இதைத்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். என்னைப்போலவே வெளியே வந்தவர்கள் பலர் உண்டு. அவர்களெல்லாம் இவர்கள் அயோக்கியர்கள் என்பார்கள். எனக்கு அப்படிச் சொல்லவும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130133/

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் விசித்திரமான கதை. தமிழ்ச்சிறுகதையின் இத்தனை வித்தியாசமான கதைக்களங்களுக்கும் கதை பிளாட்களுக்கும் அப்பாலும் இப்படி ஒரு புதிய கதைக்கான வாய்ப்பு இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பொதுவான வாசிப்பிலே அந்தக் குடிநிகழ்ச்சியில்தான் நம் மனம் நீந்திக்கொண்டிருக்கும். அதைப்பற்றித்தான் எதையோ சொல்லப்போகிறார் ஆசிரியர் என நம்மை எதிர்பார்க்க வைப்பதுதான் கதையின் உடல், அந்த நறுமணம் என்ன என்பது கவித்துவமான டிவிஸ்ட். இந்தக்கதையை கதை என்று சொல்லமுடியாது. ஒரு நல்ல கவிதையின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132232/

தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன் அன்புள்ள ஜெ இல்ட்சியவாதம் என்றால் என்ன? ஒருவன் தனக்கு எவரென்றே தெரியாதவர்களுக்காக உயிரையும் கொடுப்பது. அதற்குரிய இலட்சியங்களை உருவாக்கிக்கொள்வது. அந்தவகையில் பார்த்தால் ராணுவவீரன் கூட ஒருவகையான இலட்சியவாதிதான். ஆகவே அவனுடைய சாவை நாம் மதிக்கிறோம். இங்கே தெய்வீகனின் கதையில் இலட்சியவாதத்துக்காக ஆயுதம்தூக்குகிறார்கள். மெல்லமெல்ல அது திரிந்து எவரென்றே தெரியாதவனை கொல்கிறார்கள். இவன் ஆயுதம் தூக்கியதே அந்த எவரென்றே தெரியாதவனை காப்பாற்றுவதற்காகத்தான். அவனும் இவனைப்போலவே ஆயுதம் தூக்கி, உயிர்தப்பி, இந்தோனேசியா வந்தவனாக …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132216/

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்த ஒட்டுமொத்த கதைவரிசையும் பெண்களுக்கு மிகச்சிறப்பான ஒரு வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த பெண்கதாபாத்திரங்கள் வலுவானவை, வெவ்வேறு வகையானவை. அதோடு தமிழ்ச் சூழலில் வழக்கமாக பெண் கதாபாத்திரங்களைச் சித்திரிக்கும் இன்ஹிபிஷன்ஸ் இல்லாதவை. டெம்ப்ளேட்களுக்கும் செல்லாதவை. இது இங்கே பெண்களை எழுதும்போது மிகப்பெரிய சிக்கலாகவே என் பார்வையில் தோன்றியிருக்கிறது. பெண்கதாபாத்திரங்களை எழுதும்போது அவர்களை ஒழுக்க அளவுகோல்களின்படி அமைப்பார்கள். அல்லது அதை மீறுகிறேன் பேர்வழி என்று நேர் எதிராக அமைப்பார்கள். இரண்டுமே முன்னர் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132178/

பாலையும் செல்வேந்திரனும்

பாலை நிலப்பயணம் வாங்க செல்வேந்திரனின் எழுத்தில் பயணத்துக்கு இணையாக நண்பர்களுடனான உரையாடல்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளார்ந்த நட்புக்கு இலக்கணமான கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சுக்கள். நெருக்கமான உள் குழுமக் குறிப்புகள் இருந்தாலும் அவையும் பேசுபவர் பற்றி மேலதிகத் தகவல்களாக வந்துள்ளன. பின்னிரவில் அவர்களுக்கிடையேயான விளையாட்டுகளும், பழைய ஞாபக அலசல்களும் நம் நண்பர்களுடன் இப்படியான பயணம் செல்லத் தூண்டுபவை பாலை நிலப் பயணம்- செல்வேந்திரன்- கிரிதரன் ராஜகோபாலன்

Permanent link to this article: https://do.jeyamohan.in/130374/

Older posts «