«

»


Print this Post

காந்தியை எப்படி வகுத்துக்கொள்வது?


 இந்த விவாதம் இத்தனை தூரம் நீளுமென எதிர்பார்க்கவில்லை.  இது சாதாரணமான பேச்சாக ஆரம்பித்து மெல்லமெல்ல வளர்ந்த நூல். ஆகவே இந்நூலின் அமைப்பில் ஒரு சமமின்மை உள்ளது. ஆரம்பகாலக் கட்டுரைகள் எளிமையான பதில்களாக இருக்கையில் பின்னர் வந்த கட்டுரைகள் பெரிய விளக்கங்களாக இருக்கின்றன.

வந்துசேர்ந்தவற்றில் இன்னமும் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன.  ஜெ.சி.குமரப்பா, தரம்பால், சுந்தர்லால் பகுகுணா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, முகமதுயூனுஸ், வங்காரி மாதாய் போன்ற இருபது நவீன காந்தியர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை. அவை தனி நூலாக வெளிவரும். எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதற்காக இங்கே முடிக்கிறேன்.

நான் காந்தியை ‘முன்வைக்க’ விரும்பி இக்குறிப்புகளை எழுதவில்லை. காந்தியை புரிந்துகொள்ளும்பொருட்டே எழுதினேன். அது இருபது வருடங்களுக்கும் மேலாக என்னிடம் தொடரும் ஒரு செயல்பாடு. இது ஒரு படி மட்டுமே. இந்த விவாதத்தின் ஒட்டுமொத்தமாக காந்தியை நான் எவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல முயல்கிறேன்.

காந்தியை ஒரு மெய்ஞானியாக நான் எண்ணவில்லை.  காந்தி   தன் காலகட்டத்தை நேர்மையாக எதிர்கொண்ட ஒரு செயல்வீரர். வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கி தன் தேடலை எப்போதும் திறந்து வைத்திருந்த தத்துவவாதி. எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சொந்த அனுபவத்தளத்திற்குள் கொண்டுவந்து, தன் சொந்த தர்க்க புத்தியைக் கொண்டு பரிசீலனை செய்தவர். தன்னுடைய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் எப்போதும் மாற்றுத்தரப்புடன் விவாதத்திற்கு வைத்திருந்தவர். விவாதம் மூலம் தன்னை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு முன்னகர்ந்தவர்.

காந்தி புரிந்துகொள்ளமுடியாத கிறுக்குத்தனங்களும் பிடிவாதங்களும் உடையவர். அவரது சிந்தனைகளில் பழங்கால ஒழுக்கவியல் அம்சங்கள் பல இருந்தன. அவை இன்று ஏற்கத்தக்கவை அல்ல. அவர் தனக்கென கடைப்பிடித்த பல முறைகளும் நிராகரிப்புக்குரியவை. ஆனால் தன் வாழ்க்கையை முழுமையாகத் திறந்து வைத்து தன்னை விவாதிக்கும்படி அறைகூவியவர் அவர்.

காந்தி தான் வாழ்நாள் முழுக்க வெளிப்படையாக நேர்மையாக இருக்க முயன்றவர். எது தன் நம்பிக்கையோ அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தியவர். எந்த விளைவுக்கும் அஞ்சாதவர். ஒருபோதும் பிறருக்காக தான் நம்பாத விஷயத்தைச் செய்ய முன்வராதவர்.  

காந்தி உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும். உண்மையான அதிகாரம் சமூகத்தின் கருத்தியலில் உள்ளது என்று உணர்ந்து நீடித்த பிடிவாதமான போராட்டம் மூலம் அதை மெல்லமெல்ல மாற்றுவதற்கான முயற்சியே காந்தியின் போராட்டமுறை. மேலும் மேலும் அதிகமான மக்கள் பங்கேற்பு, போராடும் தரப்பு தன்னை அறம்சார்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியவை அதன் விதிகள். அது நிலையான நீடித்த பயனளிப்பது. அழிவுகள் அற்றது. முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வமானது.  

காந்தி மாற்று உலகுக்கான ஒரு கனவை முன்வைத்தார். மையநிர்வாகத்தின் சுமை இல்லாத, பெரும் உற்பத்தி வினியோக முறைகளின் சிக்கல் இல்லாத, தொழில்நுட்பத்தின் வன்முறை இல்லாத ஒரு உலகக் கட்டுமானம். சிறிய அலகுகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு பன்மைச்சமூக அமைப்பு அது. அதை காந்தி இந்தியாவில் ஏற்கனவே இருந்த அமைப்புகளில் இருந்து கற்றுக்கொண்டார்

காந்திய கிராம தரிசனம் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்லது திட்டம் என்று நான் கருதவில்லை. ஆனால் அது இன்றைய உலக அமைப்புக்கு மாற்றான ஒரு சாத்தியக்கூறு.  ஒரு விதை. அந்த அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பற்பல உலக உருவகங்கள் அர்த்தமிழந்து வரும் இன்று காந்தியம் பல்வேறு தரப்பைச் சேர்ந்த சிந்தனையாளர்களை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று அது மிக முக்கியமான ஒன்று.

ஆகவே இருபதாம் நூற்றாண்டுகண்ட சிந்தனையாளர்களில், ஆளுமைகளில் காந்தியே முதன்மையானவர். 

காந்தி குறித்த கட்டுரைகளின் தொகை நூலான ‘இன்றைய காந்தி’யின் பின்னுரை. தமிழினி வெளியீடு

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://do.jeyamohan.in/5806/

8 comments

Skip to comment form

 1. pearlson

  ……………… போன்ற இருபது நவீன பெரியாரியலகர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை. அவை தனி நூலாக வெளிவரும். எங்காவது நிறுத்திக்கொள்ளவேண்டுமே என்பதற்காக இங்கே முடிக்கிறேன்.

  நான் பெரியாரை ‘முன்வைக்க’ விரும்பி இக்குறிப்புகளை எழுதவில்லை. பெரியாரை புரிந்துகொள்ளும்பொருட்டே எழுதினேன். அது இருபது வருடங்களுக்கும் மேலாக என்னிடம் தொடரும் ஒரு செயல்பாடு. இது ஒரு படி மட்டுமே. இந்த விவாதத்தின் ஒட்டுமொத்தமாக பெரியாரை நான் எவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல முயல்கிறேன்.

  பெரியாரை ஒரு மெய்ஞானியாக நான் எண்ணவில்லை. பெரியார் தன் காலகட்டத்தை நேர்மையாக எதிர்கொண்ட ஒரு செயல்வீரர். வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கி தன் தேடலை எப்போதும் திறந்து வைத்திருந்த தத்துவவாதி. எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய சொந்த அனுபவத்தளத்திற்குள் கொண்டுவந்து, தன் சொந்த தர்க்க புத்தியைக் கொண்டு பரிசீலனை செய்தவர். தன்னுடைய சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் எப்போதும் மாற்றுத்தரப்புடன் விவாதத்திற்கு வைத்திருந்தவர். விவாதம் மூலம் தன்னை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு முன்னகர்ந்தவர்.

  பெரியார் புரிந்துகொள்ளமுடியாத கிறுக்குத்தனங்களும் பிடிவாதங்களும் உடையவர். அவரது சிந்தனைகளில் பழங்கால ஒழுக்கவியல் அம்சங்கள் பல இருந்தன. அவை இன்று ஏற்கத்தக்கவை அல்ல. அவர் தனக்கென கடைப்பிடித்த பல முறைகளும் நிராகரிப்புக்குரியவை. ஆனால் தன் வாழ்க்கையை முழுமையாகத் திறந்து வைத்து தன்னை விவாதிக்கும்படி அறைகூவியவர் அவர்.

  பெரியார் தான் வாழ்நாள் முழுக்க வெளிப்படையாக நேர்மையாக இருக்க முயன்றவர். எது தன் நம்பிக்கையோ அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தியவர். எந்த விளைவுக்கும் அஞ்சாதவர். ஒருபோதும் பிறருக்காக தான் நம்பாத விஷயத்தைச் செய்ய முன்வராதவர்.

  பெரியார் உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும். உண்மையான அதிகாரம் சமூகத்தின் கருத்தியலில் உள்ளது என்று உணர்ந்து நீடித்த பிடிவாதமான போராட்டம் மூலம் அதை மெல்லமெல்ல மாற்றுவதற்கான முயற்சியே பெரியாரின் போராட்டமுறை. மேலும் மேலும் அதிகமான மக்கள் பங்கேற்பு, போராடும் தரப்பு தன்னை அறம்சார்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியவை அதன் விதிகள். அது நிலையான நீடித்த பயனளிப்பது. அழிவுகள் அற்றது. முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வமானது.

  பெரியார் மாற்று உலகுக்கான ஒரு கனவை முன்வைத்தார். மையநிர்வாகத்தின் சுமை இல்லாத, பெரும் உற்பத்தி வினியோக முறைகளின் சிக்கல் இல்லாத, தொழில்நுட்பத்தின் வன்முறை இல்லாத ஒரு உலகக் கட்டுமானம். சிறிய அலகுகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு பன்மைச்சமூக அமைப்பு அது. அதை பெரியார் தென்னிந்தியாவில் ஏற்கனவே இருந்த அமைப்புகளில் இருந்து கற்றுக்கொண்டார்

  பெரியாரின் மக்கள் தரிசனம் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்லது திட்டம் என்று நான் கருதவில்லை. ஆனால் அது இன்றைய உலக அமைப்புக்கு மாற்றான ஒரு சாத்தியக்கூறு. ஒரு விதை. அந்த அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பற்பல உலக உருவகங்கள் அர்த்தமிழந்து வரும் இன்று பெரியாரியம் பல்வேறு தரப்பைச் சேர்ந்த சிந்தனையாளர்களை தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று அது மிக முக்கியமான ஒன்று.

  ஆகவே இருபதாம் நூற்றாண்டுகண்ட சிந்தனையாளர்களில், ஆளுமை பெரியார்.

  ஆகவே,

  நண்பர்களே,

  1. ஜெயமோகன் பெரியாரைப் பற்றி தான் எழுதி உள்ளார்.
  2. மொஹன் தாசை காந்தி எனும்போது ஈ வெ ரா வை பெரியார் என அழைப்பது தகும்.
  3. ஜெமொ ஒவ்வொரு ஆளுமை பற்றி தனி தனியாக எழுதும் போதும் அவர்களின் பெருமை அல்லது சிறுமை பற்றி மிக விசாலமாக எழுதுகிறார். ஆனால் he is not normally writes about comparing personalities or concepts. if he writes so , it will be understood best. I am not asking him to find the best theif out there. But understanding can be better if he compare 2 or more people or concepts.

  4. and i guess jemo will write about periyaar in future. if not then i will write just by editing name only

 2. pearlson

  காந்தியை மகாத்மா என்று நீங்கள் அழைக்காவிட்டாலும். அவரின் மிகப் பரிச்சயமான பெயரான காந்தி கொண்டு அழைப்பதனால், ஈ வெ ரா is well known by his the other name periyaar than anything else so u better call him by that.

 3. ஜெயமோகன்

  என்ன ஒரு சிந்தனைத்தெளிவு! அடியாழம் வரை தெரிகிறது!

 4. M.S.Boobathi

  மோஹன்தாசை காந்தி என்று அழைத்தால் – ஈ.வெ.ரா வை நாயக்கர் என்றல்லவா அழைக்கவேண்டும். ?(தமிழில் சர்நேம் என்கிற வகையறா இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட அது சாதியின் உட்பிரிவுதான்.) பூபதி

 5. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்
  வணக்கம். காந்தியார் குறித்து தாங்கள் எழுதிய நீண்ட நெடிய விவாதங்கள் கட்டுரைகள் குறித்த நூல் வெளிவருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.
  தாங்கள் எழுதிய கட்டுரைகள் வாயிலாகவே காந்தியார் குறித்து படிக்க துவங்கினேன். அவரை அறிந்து கொள்ளும் இன்பம் அதிகரிக்கிறது.
  ஆனால் அவரே கூறியிருப்பது போல சில நேரங்களில் அவர் விளக்குவது இன்னது என்பதை புரிந்து கொள்வதில் சற்று சிரமம் உள்ளது. குறிப்பாக சம்பாரன்,கேடா, போன்ற இடங்கல் நிகழ்ந்த அறப் போராட்டங்களை விளக்கியுள்ள அவர் ஏனோ வீரம்காம் போராட்டம் குறித்து முழுவதும் விளக்கவில்லையோ அல்லது புரிந்து கொள்வதில் எனக்கு தடுமாற்றமா விளங்கவில்லை.
  இயந்திரங்கள் குறித்த அவருடைய கருத்து அதை விளக்கும் அவரின் வாத கதி மிக பலவீனமாக இருந்தாலும் இன்றைய பொருளாதார வீழ்ச்சி அதை தொடர்ந்து ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் என அதை தொகுத்து பார்க்கும் போது கச்சிதமாக அத்தனை தளங்களையும் இணைக்கும் அவருடைய தீர்கதரிசனம் பெரிதும் வியக்கத்தக்கது. அதனை வியக்கவிட்டாலும் அதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.
  உங்களின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் ஒரு இடத்தில் மார்க்சின் ஞானம் விவேகானந்தரின் ஊக்கம் புத்தரின் அழ்ந்த அமைதி காந்தியின் அந்தரங்க சுத்தி இயேசுவின் மனிதாபிமானம் குறித்த உங்களின் ஆச்சர்யத்தை பதிவு செய்திருப்பீர்கள் எனக்கு விவேகனந்தரின் நூல்களை படிக்கும் போது மலையை கூட கடித்துத் தின்று விடலாமோ எனும் அளவுக்கு ஒரு உற்சாகம் பெருகி வந்தபடி இருக்கும் அனால் காந்தியை படிப்தற்கு நிறைய உழைப்பும் பொறுமையும் தேவைப்படுகிறது அவருடைய ஒவ்வொரு போராட்டத்திலும் விஞ்சிநிற்கும் விவேகமும் தெளிவும் ஆரம்பத்தில் படிக்கும் போது இருந்த உற்சாகமின்மை விலகதுவங்கி விட்டது. அந்த விதத்தில் இடை விடாத விவாதங்களின் மூலமாக எனக்கு மகாத்மா என்னும் மகத்தான ஆளுமையை புரிந்து கொள்ள உதவியதற்கு மிகுந்த நன்றி எவ்வளவோ எதிர்மறை கருத்துகளுக்கு நடுவிலும் அவர் குறித்த எந்த எதிர்மறை கருத்துகளை நான் விளக்கி நடந்தற்கு நா.பா வின் ஆத்மாவின் ராகங்கள் நாவல் இன்னும் மிக முக்கியமான காரணம். ஏகப்பட்ட எழுத்து பிழைகளோடு பொறுமையாக டைப் செய்வது கடினமாக உள்ளது உங்களை நீரில் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தால் இன்னும் தெளிவு பெற முடியும் என்றே நம்புகிறேன்.
  அன்புடன்
  சந்தோஷ்

  அன்புள்ள சந்தோஷ்

  காந்தியைப்புரிந்துகொள்வதில் இத்தனை இடர் இருப்பதற்கான காரணம் காந்தி தன்னுடைய சிந்தனைகள் சீராக, ஒத்திசைவுடன், ஒரு கோட்பாட்டை மையமாகக் கோண்டவையாக, இருக்கவேண்டும் என்பதில்நெந்தவிதமான கவனமும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான். அவ்வாறு கவனம் எடுத்துக்கொண்டு ஒரு கோட்பாடை முன்வைத்த சிந்தனையாளர்களிடமே நாம் தெளிவை எதிர்பார்க்க முடியும். காந்தியிடம் மட்டுமல்ல எந்த ஒரு செயல்வீரரிடமும் அந்த தெளிவை எதிர்பார்க்க முடியாது . இப்போது Anthony Sampson எழுதிய Mandela _The Autherisied Biography வாசித்துக்கொண்டிருக்கிறேன். மண்டேலாவிடம் விரியும் முரண்பாடுகள் விளக்கபப்டாத உள்ளுணர்வுசார்ந்த செயல்பாடுகள் பல….காந்தியை நாம் அந்தச்சூழலில் அவரை வைத்துப்பார்த்து மட்டுமே உள்வாங்கிக்கொள்ள முடியும்

  நேரில் சந்திக்கலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை

  ஜெ

 6. veerantamil

  pearlson நகைச்சுவையுடன் பின்னூட்ட மிட்டது பகுத்தறிவுடனா ?
  //பெரியார் உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.//
  //முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வமானது. //
  //அடிப்படை எண்ணத்திலிருந்து சிந்தனையாளர்கள் முன்னே செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன//

  பெரியார் – சத்யாக்கிரம்-ஜனநாயகபூர்வமானது-முன்னே செல்வதற்கு ????

  //காந்தியை மகாத்மா என்று நீங்கள் அழைக்காவிட்டாலும். அவரின் மிகப் பரிச்சயமான பெயரான காந்தி கொண்டு அழைப்பதனால், ஈ வெ ரா is well known by his the other name periyaar than anything else so u better call him by that.//

  #என்ன ஒரு சிந்தனைத்தெளிவு! அடியாழம் வரை தெரிகிறது!
  By ஜெயமோகன்#

  இது தான் அருமை :))))))))

 7. Wilting Tree

  ஜெயமோகன்,

  “காந்தி உருவாக்கிய போராட்ட வழிமுறையான அகிம்சை-சத்யாக்கிர முறையே ஜனநாயக யுகத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகும்.” என்று சொல்கிறீர்கள்.

  ஜனநாயக முறையில் போராட மக்களை ஒன்று சேர்ப்பவை எவை? அடிமைத்தனம் வசதியாக இருந்திருந்தால் காந்திக்குப் பின் மக்கள் கூடியிருப்பார்களா?

 8. Wilting Tree

  நான் “வசதியாக” என்று சொல்லியிருப்பது பொருளாதாரத் தேவைகளை.

  ஒரு அரசு எனது முப்பாட்டனாரின் சொத்துக்களை அபகரித்து குடும்பத்தை பிச்சைக்காரர்களாக்கியது என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த அரசு நடத்தும் ஒரு அமைப்பு, பரம்பரை பிச்சைக்காரனாகிய எனக்கு மூன்று வேளை பிச்சை போடுகிறது; அந்த அமைப்பின் உதவி இல்லாவிட்டால் நான் பட்டினி கிடந்தது சாக வேண்டியதுதான். இப்போது அந்த அமைப்பு என்னைக் காப்பாற்றிய மீட்பர் இந்த அரசே, அதற்கு அடிபணிந்து நட என்று சொல்லுமானால், அடிபணியாதவர்கள் (பால் சக்காரியாவைப் போல) தஸ்லிமாவைப் போல ஆதரவற்று அழிவார்களானால், என்னை ஆதரிப்பதைவிட இரண்டு அல்லது மூன்று வேளை எலும்புத்துண்டே போதுமானது என ஸமூகம் எண்ணுமானால், இந்த வசதியான அடிமைத்தனத்தை நான் எதிர்க்க வேண்டுமா? அல்லது ஆதரிக்க வேண்டுமா?

Comments have been disabled.