இலக்கிய அபிப்பிராயம் சொல்வது …

  இலக்கியப்பேச்சுக்களில் அவ்வப்போது நான் எதிகொள்ளும் ஒரு கேள்வி உண்டு, இலக்கியப் படைப்பாளிகள் ஏன் அவர்களின் எழுத்துக்கள் மீதான கருத்துக்களைக் கண்டு எரிச்சல் கொள்கிறார்கள்? அவ்வாறு எரிச்சல்கொண்ட எழுத்தாளர்களின் ‘முதிர்ச்சியின்மை’ பற்றிய புகார்களாகவே இந்தக் கேள்விகள் எழுகின்றன. எழுத்தாளர்களிடம் முதிர்ச்சியின்மை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. முதிர்ந்துவிட்டால் அவன் ஏன் எழுதவருகிறான்? எழுதுவதென்பதே ஒரு நிலைகுலைவைச் சரிசெய்வதற்காகத்தான். எழுத்தாளனிடம் எப்போதுமே படபடப்பும், நிலைகொள்ளாமையும் இருக்கும். நான் இதுவரை சந்தித்த எழுத்தாளர்களிலேயே நிதானமானவர்கள் சுந்தர ராமசாமியும் நாஞ்சில்நாடனும்தான். அவர்களிடம் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132394/

நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

  வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் அம்மம்மாவின் குடிசைக்கு முன்னால் சனங்கள் குழுமியிருப்பார்கள். உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை தமது மடியில் கிடத்தி நிலத்தில் அமர்ந்திருக்கும் இளந்தாய்மார்கள் அம்மம்மாவிற்காக காத்திருப்பார்கள். மனக்குறை, ஏதென்று தெரியாத பயமும் பதற்றமும் பீடித்தவர்கள் உட்பட பக்தர்களும் வந்துசேர பூமியில் இருள் பூக்கத்தொடங்கியிருக்கும். நெடுநிலத்துள் – அகரமுதல்வன்

Permanent link to this article: https://do.jeyamohan.in/132132/

வில்வண்டி- கடிதங்கள்

வில்லுவண்டி[ சிறுகதை] தனா அன்புள்ள ஜெ, தனா எழுதிய கதையை முன்பே படித்திருந்தேன். என்னுடைய ஊரைச் சேர்ந்த கதை. ஓரளவு கள்ளிக்காட்டு இதிகாசத்தை நினைவுபடுத்தும் கதைச்சூழல். நல்லகதை. இதை வாசிக்கும்போதுதான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பிரச்சினை என்ன என்று தெரிகிறது. ஆசிரியரே உணர்ச்சிவசப்பட்டு கதைசொல்வதுபோன்ற அந்த மொழி கதைமுழுக்க ஆசிரியரே இருப்பதுபோல தோன்றவைக்கிறது. இந்தக்கதையில் அந்த அம்சம் இல்லை. ஆசிரியர் ஒரு குரலாக எங்கேயும் இல்லை. இந்தவகையான கதைகள் எந்த அளவுக்கு உணர்ச்சியில்லாமல் சொல்லப்படுகின்றதோ அந்த அளவுக்கு நல்லது …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132345/

உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ, அனோஜனின் கதையை வாசித்தபோது உருவான ஒவ்வாமை என்பது அந்த பேசுபொருள் சார்ந்தது. ஒவ்வாமையை உருவாக்கும் விஷயங்களை எப்போதுமே எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறர்கள். ஒவ்வாமையை உருவாக்குபவை என்ன என்று பார்த்தால் அவை பெரும்பாலும் taboo சம்பந்தமானவை. அல்லது பெரிய வீழ்ச்சிகள் சம்பந்தமானவை. Taboo என்பவை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சடங்காச்சாரங்கள் அல்லது ஒழுக்கநெறிகள் என்று தோன்றும். ஆனால் அவற்றுக்கு அடியில் தத்துவார்த்தமான ஒருவிஷயம் உள்ளது. அந்த தத்துவம் வரைச் சென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132390/

இணைவு, ராஜன் – கடிதங்கள்

இணைவு [சிறுகதை] போழ்வு [சிறுகதை]      அன்புள்ள ஜெ,   போழ்வு இணைவு இருகதைகளும் இணைந்து ஒரு நீண்ட குறுநாவலாக ஆகின்றன. அதற்குள் வேலுத்தம்பியின் ஒரு வாழ்க்கை நிகழ்ந்து முடிகிறது. அகரவரிசையிலே சொன்னால் ராஜா கேசவதாஸ் பெயரிடும் இடத்தில் தொடங்கி கடைசியில் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையின் பெயரைச் சொல்லி வெட்டுடா என்று கூவும் இடம் வரை. அதுவரை எவ்வளவு பதற்றம் எவ்வளவு அலைக்கழிவு. வெளியே இருந்து பார்த்தால் சின்னவிஷயமாக தெரியலாம். ஆனால் அந்த சின்னநாட்டின் திவான் பதவிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131852/

கூடு,பிறசண்டு- கடிதங்கள்

‘பிறசண்டு’ [சிறுகதை] அன்புள்ள ஜெ   பிறசண்டு கதை எங்கோ நிஜமாகவே நடந்ததாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் இதை நான் கண்டிருக்கிறேன். என் மாமாவீட்டில் திருட்டு போயிற்று. கேஸ் கோர்ட்டிலே நடந்தது. மாமா திருடனை கண்ணால் பார்த்த சாட்சி. மாமா சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தால் திருடன் ஓடுவதை கண்டிருக்கிறார். சின்னப்பையன்தான், இந்தக்கதையிலே வருவதுபோல   பிறகு போலீஸ் ஸ்டேஷனிலும் கோர்ட்டிலும் விசாரணை. அவர்கள் தொடர்ச்சியாக சந்தித்திருக்கிறார்கள். நடுவிலே இவருக்கு சுகரினால் மயக்கம் வந்தபோது அவன் டீ வாங்கி …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131794/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–79

பகுதி ஏழு : நீர்புகுதல் – 8 நான் பலராமரின் அறைக்குச் சென்றபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிறைந்திருந்தனர். ஏவலன் என் வருகையை அறிவித்து எனக்கு நுழைவொப்புதல் அளித்தான். நான் உள்ளே சென்று பலராமரை வணங்கினேன். படைத்தலைவர்கள் எந்தத் தொடர்பும் இல்லாமல் தங்களுக்குள் மாறி மாறி பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. பலராமர் எந்த சொற்களையும் செவி மடுக்கவில்லை என்பதை உணர்ந்தேன். நான் நுழைந்ததும் என்னை நிமிர்ந்து பார்த்து “என்ன?” என்று கேட்டபோது என் சொற்களையும் அவர் கேட்கப்போவதில்லை என்று …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132401/

வாரஇதழ்களின் வரலாறு, மாலன்

மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் வார இதழ்களை வாசித்தவன். அதாவது என் ஐந்து வயது முதல். நான் குமுதம் வாசிக்க தொடங்கும்போது அதில் ராஜமுத்திரை தொடராக வந்துகொண்டிருந்தது என்பது நினைவு. அதற்கு லதா வரைந்து வெளிவந்த ஓவியங்கள், அந்தப் பக்கங்களுடனேயே நினைவில் நிற்கின்றன. ‘விகாரமுக வாலிபன்’ இந்திரபானு என்னுடைய அக்கால ஹீரோ இரண்டாயிரம் வரைக்கும்கூட நான் வார இதழ்களின் வாசகன். புரட்டிப்பார்ப்பதாவது உண்டு. ஒரு கட்டத்தில் சுஜாதா மட்டும். …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132355/

உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

உன் மார்பின் இடது பக்கத்தைக் குறிபார்த்து யாரோ கைத்துப்பாக்கியால் சுட்டது போலவும், குண்டு நுழைந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகி மார்பெல்லாம் பரவுவதுபோலவும் அந்தக் காட்சி இருக்கிறது. எனது இடது கண்ணை இறுக்க மூடி வலது கையின் ஆள்காட்டி விரலை முன்னுக்கு நீட்டிக் கட்டை விரலை விறைத்து வைத்துக் கொண்டு திரையில் தெரியும் உன்னைப் பொய்யாய்ச் சுடுகிறேன். உனது கழுத்தின் ஒளி மிகுந்த பகுதியைச் சொறிந்து விட்டபடி மின்தூக்கியின் மேல் பதிக்கப்பட்டிருக்கும் சின்ன சதுரத்தில் மாறிக் கொண்டிருக்கும் எண்களை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132282/

இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக வாசகர்களில் பதிந்திருக்கும் என நினைக்கிறேன் கெ.எஸ்.ராஜன் *** அன்புள்ள ஜெயமோகன், ‘இசுமியின் நறுமணம்’ சிறுகதை வாசித்தேன். ஒரு கொண்டாட்ட மனநிலையில் தொடங்கி உணர்வுபூர்வமாக முடியும் கதை. காலையில் இயந்திரத்தனமாக வேலைசெய்து, இரவில் குடியும் கொண்டாட்டமுமாக இருக்கும் ஜப்பானியர்களின் ஆழ்மன …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/132276/

Older posts «